இந்தியாவின் பிரபல அரசியல் கட்சியான மு.கருணாநிதியின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்திற்குள் தற்போது உட்பூசல் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு பொருத்தமானவரை தெரிவுசெய்வது தொடர்பில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
தி.மு.கவின் தலைமைத்துவம் தொடர்பில் மு.கருணாநிதியின் புதல்வர்களான மு.க.அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் என மு.கருணாநிதி அண்மையில் அறிவித்திருந்தார்.
திராவிட முன்னேற்றக் கழகம் சிரேஷ்ட தலைவர்களுக்கு கட்சியின் புதிய தலைவரை தெரிவுசெய்வதற்கு இடமளிக்கும் ஒரு கட்சி அல்லவென இதற்கு பதலளிக்கும் வகையில் மு.க.அழகிரி தெரிவித்திருந்தார்.
இதேவேளை இன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தை மு.க.அழகிரி புறக்கணித்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.