‘மிசா’ காலத்தில் இந்திரா வீட்டில் புகுந்த அமெரிக்க உளவாளி: விக்கிலீக்ஸ்

indira gandhiடெல்லி : இந்தியாவில் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்ட பின்னர் இந்திரா காந்தியின் அரசியல் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியாமல் ஒருபக்கம் அமெரிக்கா கடுமையாக திணறியபோதும், இந்திராவின் வீட்டுக்குள்ளேயே கிட்டத்தட்ட 2 ஆண்டு காலத்திற்கு தனது உளவாளியை வைத்திருந்தது என்ற அதிர்ச்சித் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

1975ம் ஆண்டு முதல் 1977 வரை இந்த உளவாளி, இந்திரா காந்தியின் வீட்டுக்குள் ஊடுறுவியிருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவிக்கிறது.

பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியிருந்த காலம் அது. இந்திராவின் அடுத்த மூவ் என்ன என்பதைக் கணிக்க முடியாமல் திணறியது அமெரிக்கா. இந்த நிலையில்தான் 1975ம் ஆண்டு தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரை பிரதமர் வீட்டுக்குள்ளேயே ஊடுறுவ வைத்தது அமெரிக்கா.

1975ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி அவசர நிலையை பிரகடனம் செய்தார் இந்திரா. அப்போது அவருக்கு பின்பலமாக இருந்தவர்கள் மகன் சஞ்சய் காந்தியும், ஆர்.கே.தவனும்தான். இதை இந்திரா வீட்டில் நுழைந்த உளவாளி மூலம் உறுதிப்படுத்த முடிந்ததாக அமெரிக்க தூதரக தகவல் தெரிவித்துள்ளது.

1976ம் ஆண்டு மத்தியில், பிரதமர் இந்திரா காந்தியின் முக்கிய முடிவு குறித்த ஒரு யூகத் தகவலை அமெரிக்க தூதரகத்திற்கு இந்த உளவாளி தகவல் அனுப்பினாராம். அது, 77 மத்தியில் பொதுத் தேர்தலுக்கு இந்திரா காந்தி அழைப்பு விடலாம் என்பது.

TAGS: