தொடர்கிறது கமலின் ‘தலைவன் இருக்கிறான்’ !

kamalவிஸ்வரூபம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை படுவேகத்துடன் உருவாக்கிக் கொண்டு வருகிறார் கமல்.

விஸ்வரூபம் இரண்டாம் பாகம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்ட நிலையில், பல வருடங்களுக்கு முன் கமல் அறிவித்த ‘தலைவன் இருக்கிறான்’ திரைப்படத்தையும் துவங்கவிருக்கிறாராம்.

கமல் துவங்கிய தலைவன் இருக்கிறான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பல காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.

ஆனால் விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முடிந்ததும் தலைவன் இருக்கிறான் திரைப்படத்தை கமல் துவங்குவதற்கு காரணம் விஸ்வரூபம் திரைப்படம் வசூலித்த லாபம் தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

கமலுடன் இத்திரைப்படத்தில் ஜோடியாக நடிக்க அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

TAGS: