மீண்டும் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் விக்ரம்

actor vikram in i movieவித்தியாசமான தோற்றங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர், நடிகர் விக்ரம். சேது, காசி, பிதாமகன், தெய்வத்திருமகள் என்று, சில படங்களை இதற்கு சான்றாக கூறலாம்.

அப்படிப்பட்ட விக்ரம், இப்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும், ‘ஐ’ படத்தில் ஒரு வித்தியாசமான மிருக மனிதன் கெட்டப்பில் நடிக்கிறார்.

ஏற்கனவே, இப்படத்தில் உடல் எடையை குறைத்து, அதிகப்படுத்தி என மூன்று மாறுபட்ட கெட்டப்பில் நடிக்கும் விக்ரமுக்கு, இந்த மிருக மனிதன் கெட்டப்பில் நடிப்பது ரொம்ப சவாலாக இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், எப்போதுமே தன் படங்கள் சம்பந்தப்பட்ட முக்கிய விஷயங்களை இரகசியமாக பாதுகாத்து வரும் ஷங்கர், இந்த மிருக மனிதன் கெட்டப் சம்பந்தப்பட்ட தகவல்களையும் போட்டோக்களையும் ரொம்ப சீரியசாக பாதுகாத்து வருகிறார்.

TAGS: