இலங்கை சிங்கள இராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படமாட்டாது என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
தஞ்சையிலுள்ள விமானப்படை தளத்தில் புதுப்பிக்கப்பட்ட விமான ஓடுதளத்தை திங்களன்று திறந்து வைத்தபோதே அவர் அவ்வாறு கூறினார்.
ஆனால் அது தொடர்பான வேறு கேள்விகள் எழுப்ப செய்தியாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தமிழகத்தில் அவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டது நிறுத்தப்பட்டது.
ஆயினும் கூட இந்தியாவின் மற்ற பகுதிகளில் இன்னமும் அவ்வப்போது பயிற்சி அளிக்கப்பட்டே வருகிறது.
தற்போதும்கூட செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணி, இலங்கை இராணுவ வீரர்களுக்குத் தமிழ் மண்ணில் பயிற்சி அளிக்கப்படக்கூடாது என்று மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாகத்தான் கூறினார் என்பது கவனிக்கத்தக்கது.
-BBC
ராஜீவ் காந்தி படுகொலையில் சந்தேகம் ஏற்படுகிறது? மகாத்மா காந்தியை கொன்றது ஒரு வடநாட்டு இந்தியன். அதே போன்று ராஜீவை முடித்துவிட்டு பலியை புலிகள் மீது சுமத்தலாம் அல்லவா? இலங்கை ராணுவ அணிவகுப்பில் ராஜீவை சிங்களவன் தாக்கினானே, அதை ஏன் இந்திய மத்திய அரசாங்கம் பெரிது படுத்தவில்லை ? உலகமே பார்த்து சிரித்ததே அப்போது புடுங்கினார்களா? மீண்டும் மீண்டும் இலங்கையுடன் சல்லாபம் கொள்வதின் காரணம் என்ன ?? என்னமோ இருக்கு ???
முதலில் பயிற்சி இல்லை என்பிர்கள் . அப்புறம் எங்கள் இனத்தை அளிக்க துணை நிட்பிர்கள் . நல்ல நடிகனையா நீங்கள் .
அப்படியென்றால் தமிழ் நாடு மாநிலம் இந்தியாவில் ஓர் அங்கம் இல்லை என்றுதான் அர்த்தம்.தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் எதுவும் வடவ்னிடம் எடுபடவில்லை.குறிப்பாக ஈழத் தமிழரின் பிரச்சனைகள் குறித்து தமிழ் நாட்டவரின் உணர்வுகளுக்கு வடவன் கொஞ்சங்கூட மதிப்பளிப்பது கிடையாது.இது தமிழ் நாட்டவர்களுக்கும் தெரியும்.ஆனால் இனஉணர்வு அவர்களிடயே மங்கிக் கிடப்பதால் அங்குள்ள 7 கோடித் தமிழ்களும் மீளா உறக்கத்தில் உள்ளனர்.சினீமா வேறு அவர்களின் இன மொழி உணர்வுகளுக்கு எமனாக அமைந்து விட்டது.