பல விருதுகளை வென்ற ‘நானும் ஒரு தாய்’ குறும்படம்

maxresdefaultமரண அனுபவம் மனிதர்கள் மேல் கொண்ட வெறுப்பை அழிக்கிறது. இந்த வாழ்வு முடிவுறும் தினத்தில் அன்பை மட்டுமே நாம் எதிர்ப்பார்ப்பவர்களாக மாறுகிறோம். அன்பை மட்டுமே செலுத்தவும் விரும்புகிறோம். மரணம் நினைவில் இல்லாத மனிதன் மட்டுமே அன்பை செலுத்துபவர்கள் இடத்திலும் வெறுப்பைக் கக்குகிறான்.

ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தல் என்பதும் மரணத்துக்குச் சென்று திரும்பி வருதல்தான்.

ஆனால், அவ்வனுபவம் வாய்க்காத ஆண்களுக்கு அச்செயல் ஒரு தொழிற்சாலை உற்பத்தியாகி விடுகின்றது. இந்த இயற்கை சுழன்றால் ஆண்களின் மனநிலை என்னவாகும் என்பதையும் பெண்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள் என்பதையும் விவரிக்கும் இளம் இயக்குநர் கோவர்தனின் ‘நானும் ஒரு தாய்’ எனும் குறும்படம் பலவிருதுகளை வென்றதில் ஆச்சரியமில்லை.

இலங்கையின் கிழக்கே (தென்தமிழீழம்) மட்டக்களப்பைச் சேர்ந்த கோவர்த்தனன், பிரபல தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவிடம் நடிப்பு மற்றும் இயக்குநர் பயிற்சிகளைப் முறையாகப் பயின்றவர்.

‘நானும் ஒரு தாய்’ குறும்படத்தில் இரு முக்கியப் பாத்திரங்களை மட்டுமே வைத்து கச்சிதமான படத்தை உருவாக்கியும் நடித்தும் உள்ளார் கோவர்த்தனன்.

குறிப்பாக அப்பெண். கணவனின் மனமாற்றத்தின் போது அவள் கண்களில் அத்தனைக் காதல். அதை வழங்க பெண்களால் மட்டுமே சாத்தியமாகின்றது. நேர்த்தியான நடிப்பு.

இன்றைய நகர வாழ்வின் பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஒரு வருங்கால தாயின் தகப்பனின் மனதை இயக்குநர் அறிந்துவைத்துள்ளார். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும்.

* காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்

* ‘நானும் ஒரு தாய்’ குறும்படம் : http://www.youtube.com/watch?v=0xTFrNGDFYg

* ‘ஜில்லுனு ஒரு கலவரம்’ குறும்படம் : http://www.youtube.com/watch?v=gqS9fGJJ4kE

TAGS: