தமிழகத்தில் அதிமுக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு மே மாதம் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா ஒன்பதாவது முறையாக தனது அமைச்சரவையினை மாற்றியமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இரு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர், இருவர் நீக்கப்பட்டிருக்கின்றனர்.
தொழிலாளர் நலத்துறை சி.த.செல்லபாண்டியன், மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது ஜான் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.பி.சண்முகநாதன், மற்றும் சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சண்முகநாதன் முன்பு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர். 2011ஆம் ஆண்டு நவம்பரிலேயே அவர் பதவி இழந்தார். தற்போது அவர் சுற்றுலாத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்போது அமைச்சர் பதவியினை இழந்திருக்கும் செல்லப் பாண்டியன் வசம் இருந்த தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவியும் திங்கட்கிழமை பறிக்கப்பட்டு எஸ்.பி. சண்முகநாதன் புதிய செயலாளர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தவிர வனத்துறை அமைச்சர் பச்சைமால் தொழிலாளர் நலத்துறைக்கும், சுற்றுலாத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் இந்து அறநிலையத்துறைக்கும், அத்துறையை நிர்வகித்து வந்த எம்.எஸ்.எம். ஆனந்தன் வனத்துறைக்கும் மாற்றப்படுகின்றனர்.
பாத்துமா உன்னை அறியாமலே நீயே உன் பொறுப்பையும் மாத்தி ஒன்னும் இல்லாமே செய்துக்க போறே!