இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் வல்லுறவுக் குற்றங்கள்!

புதுடெல்லி, ஜூன் 19-child rape

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் கூடிக்கொண்டே வருவதை உறுதிப்படுத்துகிறது.

இந்தியாவில் 2007ம் ஆண்டு 5045 சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2008ல் 5446 ஆக உயர்ந்து 2009ல் 5336 ஆக குறைந்துள்ளது. 2010ல் 5484 ஆக உயர்ந்து 2011ல் 7112 ஆக அதிகரித்து. கடந்த (2012) ஆண்டு 8541 சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த 6 ஆண்டு கணக்கெடுப்பில் ஒரு ஆண்டை தவிர்த்து மத்திய பிரதேச மாநிலம் தான் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேசத்தில் 2007ம் ஆண்டில் 1043 சிறுமிகளும், 2008ல் 892 சிறுமிகளும், 2009ல் 1071 சிறுமிகளும், 2010ல் 1182 சிறுமிகளும், 2011ல் 1262 சிறுமிகளும், கடந்த (2012) ஆண்டில் மட்டும் 1632 சிறுமிகளும் இங்கு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.

TAGS: