பெண்களில் மூன்றில் ஒருவர் வன்முறைகளுக்கு ஆளாகின்றனர்!

india22613bஉலகின் பெண்களில் மூன்றில் ஒருவருக்கும் அதிகமானோர் பாலியல் அல்லது உடல் ரீதியான வன்முறைகளுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வொன்று கூறுகிறது.

கொலை செய்யப்பட்டுள்ள பெண்களில் 38 விழுக்காட்டினர் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களாலேயே கொல்லப்பட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இவ்வாறான வன்முறைகள் மன அழுத்தம் மற்றும் மற்றைய உடல் பாதிப்புகளுக்கு காரணமாகியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ளும் போக்கு கைவிடப்படவேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கை கோரியுள்ளது.

ஆகக்கூடுதலாக, இலங்கையிலும் இந்தியாவிலும் வங்கதேசத்திலும் 38 விழுக்காடு பெண்கள் வாழ்க்கைத் துணைகளால் வன்முறைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் இந்த அளவு 37 விழுக்காடாகவும் ஐரோப்பாவில் 25 விழுக்காடாகவும் உள்ளது. -BBC

TAGS: