நிவாரணம் கேட்ட விவசாயியை சாகச் சொன்ன கலெக்டர்

india28613bராஜ்நந்கவான்: நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்று முறையிட்ட விவசாயியை, உன் விருப்பப்படி செத்துப் போ என்று ஒரு மாவட்ட கலெக்டர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் குதெரா பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமேஷ்வர் பன்ஜாரி. ராமேஷ்வர், தனக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலம் அருகே சாய ஆலையால் தனது நிலம் மாசுபடுவதாகவும், அதற்கு நிவாரணம் வழங்கக்கோரியும் மனு அளித்துள்ளார்.

மக்கள் குறைதீர்ப்பு முகாமில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் அசோக் அகர்வாலிடம் தனது மனுவை பன்ஜாரி அளித்துள்ளார். மேலும் கலெக்டரிடம் முறையிட்ட அவர், நிவாரணம் கிடைக்காவிட்டால் தான் இறப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த அகர்வால், நீங்கள் விரும்பினால் போய் சாகுங்கள்; அதற்கு எங்களிடம் அனுமதி பெற அவசியமில்லை என தெரிவித்துள்ளார். கலெக்டரின் இந்த பேச்சு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

TAGS: