புதுடில்லி: சி.பி.ஐக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடர்பான அமைச்சரைவை பரிந்துரைக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நிலக்கரி சுரங்க வழக்கு குறித்து விசாரணை நடத்தி சி.பி.ஐ., அதன் அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் காண்பித்ததை சுப்ரீம் கோர்ட் கண்டித்தது. சி.பி.ஐ தற்போது கூண்டுக்கிளியாக இருப்பதாகவும், கூண்டுக்கிளியாக இருக்கும் வரையி்ல் அவை சுதந்திரமாக செயல்பட முடியாது, எஜமானரின் பேச்சை மட்டுமே அவை பிரதிபலிக்க கூடியதா இருக்கும் என சுப்ரீம் கோர்ட் தன்னுடைய கண்டத்தில்தெரிவித்து இருந்தது.
தொடர்ந்து அரசியல் தலையீடு இல்லாமல் தன்னாட்சி அமைப்பாக இருக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியது. இது குறித்த அறிக்கையை வரும் 10-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என குறி்பபிட்டிருந்தது.
இதனைதொடர்ந்து மத்திய நிதியமைச்சர் தலைமையி்ல் சி.பி.ஐ., அமைப்பிற்கு அதிகாரம் வழங்குவது குறித்த ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல், உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே, வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி உட்பட பலர் குழுவில் இடம் பெற்றனர்.
சி.பி.ஐ., வழக்கு விசாரணையை சுதந்திரமாக நடத்துவதை கண்காணி்க்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவை அமைப்பது, மற்றும நிதி ஆதாரங்களை அதிகரிப்பது, தொடர்ந்து சி.பி.ஐ இயக்குநரை நியமிப்பதில் பிரதமர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, பார்லிமென்ட் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைப்பது போன்ற பரிந்துரைகளை அமைச்சர்கள் குழு உருவாக்கியது.
அமைச்சர்கள் குழு பரிந்துரைந்த கருத்துக்களை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து வரும் 6-ம் தேதி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.