இந்தியா முழுவதும் ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. கணக்கெடுப்பில் ஈடுபடும் ஊழியர்கள், சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவரின் பெயர், தொழில், இருப்பிடம் போன்ற எல்லா விவரங்களையும், அதற்கான விண்ணப்பத்தில் பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில் அந்தப் படிவத்தில் திருநங்கையர்களுக்கு 9 என்ற குறியீட்டு எண் தற்போது வழங்கப்பட்டிருப்பதை மாற்றவேண்டும் என்று திமுக தலைவர் மு கருணாநிதி கோரியுள்ளார்.
பொருளாதார கணக்கெடுப்பு படிவத்தில் ஆண் என்பதற்கு 1 என்றும், பெண் என்பதற்கு 2 என்றும் குறிப்பிட்டு விட்டு ஆண் பெண் அல்லாத பாலின பிரிவுக்கு 9 என்ற குறியீட்டு எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைப்பற்றி திருநங்கையர்கள் கூறும்போது, “ஏற்கனவே எங்களை அந்த 9 என்ற எண்ணைக் குறிப்பிட்டு தான் கிண்டல் செய்கிறார்கள், இப்போது அரசே எண்ணைக் குறிப்பிட்டிருப்பது எங்களை அவமானப்படுத்துவதாக உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள பொருளாதார கணக்கெடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டபோது, இந்தப் படிவம் பற்றி மத்திய அரசில் தான் கேட்க வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் தவறை யார் செய்திருந்தாலும், மத்திய அரசு செய்திருந்தாலும், மாநில அரசு அதைப்பற்றி கேட்காமல் இருந்தாலும், உடனடியாக இதற்கு உரியவர்கள் இதனைக் கவனித்து இந்தத் தவறினைக் களைய ஆவன செய்ய வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக திமுக தலைவர் மு கருணாநிதி சனிக்கிழமை கோரியுள்ளார்.
இந்தியர்களின் பொருளாதார கணக்கெடுப்பிற்கு பயன்படுத்தப்படும் படிவத்தில் திருநங்கையர்களுக்கு 9 என்ற குறியீட்டு எண் வழங்கப்பட்டிருப்பது குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் திருநங்கையர்களை அதிகம் அவமதிப்பதாக கூறுகிறார் திருநங்கை பிரியா பாபு. தமிழ்நாட்டு திருநங்கைகளை “ஒன்பது” என்று இழிவுபடுத்தும் பழக்கம் இருப்பதால், அரசின் இந்த படிவத்திலும் அதே எண் கொடுக்கப்பட்டிருப்பது தங்களை இழிவுபடுத்துவதை அரசே அங்கீகரிப்பதாகவும், ஊக்குவிப்பதாகவும் ஆகும் என்பதால் அரசு இந்த எண்ணை அகற்றவேண்டும் என்றும் அவர் கூறினார். -BBC


























அரசே அவமானப்படுத்தலாமா? ஐயோ ஐயோ மகா தப்பு ,,யாரு அந்த சரக்கு படத்தில் ?? பார்பதர்ப்பு சூபரா இருக்கு ,,கோழி குருடா இருந்தாலும் கொழும்பு ரூசியாதானே இருக்கு ,