இந்தியாவிற்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி, வெளிநாட்டுக் கடன்

india01713bபுதுடில்லி:இந்தியாவிற்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி வெளிநாட்டு கடன் உள்ளது. இது குறுகிய கால வெளிநாட்டுக்கடன்கள். இதை இன்னும் 9 மாதங்களில் திருப்பிச்செலுத்த வேண்டியது அவசியம்.

ரூபாயின் மதிப்பு சரிவு:டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா இன்னும் ஓராண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டிய குறுகிய காலக்கடன்கள் பெருகி இருப்பது பெரும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.

9 மாதங்களில் செலுத்துதல் அவசியம்:இன்னும் 9 மாதங்களில், அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சுமார் ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடிகுறுகிய காலக்கடன்களை வெளிநாடுகளுக்கு இந்தியா திரும்பச் செலுத்த வேண்டி உள்ளது.இந்த குறுகிய காலக் கடன்கள் 6 ஆண்டுகளில் 3 மடங்காக உயர்ந்துள்ளது. உலகப் பொருளாதாரம் சரியத் தொடங்கிய காலக்கட்டத்தில், 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் இது ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 200 கோடி மட்டுமே இருந்தது.இந்தக் காலகட்டத்தில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 2.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை கடன்களால் சரி கட்டப்பட்டுள்ளது.

இன்னும் ஓராண்டுக்குள் இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டிய குறுகிய காலக்கடன்களின் அளவு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி என்பது தற்போது நமது கையில் இருக்கிற மொத்த அன்னியச் செலாவணியில் 60 சதவீதம் ஆகும்.

இந்த 60 சதவீதம் என்பது, 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 17 சதவீதமாகவே இருந்தது. 2008-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் திருப்பிச் செலுத்தும் சக்தி குறைந்து கொண்டே வருவதை இது காட்டுகிறது.வெளிநாட்டுக்கடன்கள் இந்த அளவுக்கு பெருகி இருப்பதற்கு 2004-ம் ஆண்டுக்கு பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய பெருமளவு கடன்களும் காரணம்.

ஆனால் இந்த நிபந்தனைகளை அமெரிக்க ரிசர்வ் வங்கி கடினமானதாக்கி விட்டால், தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடன்களை எப்படி திருப்பிச் செலுத்தும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

‌ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி தேவை:ஏற்கனவே வரும் மார்ச் மாதத்துக்குள் இந்தியா ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடி குறுகிய கால கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில், நாட்டின் தற்போதைய நடப்பு கணக்கு 4.7 சதவீதம் சரிக்கட்டுவதற்கு மேலும் ரூ. 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

TAGS: