ஊட்டச்சத்து குறைவு இந்தியாவில்தான் அதிகம்

india01713cபுதுடில்லி: சர்வதேச அளவில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் இந்தியாவில்தான் 40 சதவீதத்தினர் உள்ளனர் என்றும், இதற்கு இந்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அமல்படுத்துவதில் சீரான வழிகள் பின்பற்றப்படவில்லை என்றும், இந்திய கொள்கைகள் படுமோசமாக இருப்பதாகவும் ஊட்டச்சத்து தொடர்பான ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனடாவை மையமாக கொண்டு செயல்படும் அரசு சாரா ஊட்டச்சத்து அமைப்பு ஆய்வு செய்யும் என்று தலைவர் எம்.ஜி.,வெங்கடேஷ் மன்னார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்: இந்தியாவில் சமீப காலமாக ஊட்டச்சத்து குறைவு வளர்ச்சி ரத்தசோகை பாதிப்பு விகிதம் அபரிதமாக இருந்து வருகிறது. உலக அளவில் 40 சதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர். சீனா, நேபாளம், பிரேசில், வங்கதேசம் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா படு மோசமாக உள்ளது. இங்கு திட்டங்கள், கொள்கைகள் செயல்படுத்துவதில் , கையாள்வதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. சுகாதாரம், குழந்தைகள் நலம் மற்றும் பெண்கள் முன்னேற்றம், கல்வி , கிராமப்புற வளர்ச்சி துறைகளில் குறைபாடுகள் உள்ளன. இந்த துறைகள் எவ்வித முன்னோக்கு திட்டங்களையும் எடுத்து செல்லவில்லை. இந்த துறைகள் மீதும் உரிய நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது.

பழம் பெரும் புள்ளி விவரங்கள் : மத்திய, மாநில அரசுகள் இடையே ஒருங்கிணைப்பில் பெரும் குறைபாடுகள் இருக்கின்றன. இதுவும் திட்டங்களை செயல்படுத்துவதில் இடையூறை ஏற்படுத்துகிறது. 2005 முதல் மத்திய அரசின் புள்ளி விவரங்கள் துல்லியமாக எதுவும் பராமரிக்கப்படவில்லை. பழம் பெரும் புள்ளி விவரங்களையே மத்திய அரசு தருகிறது. மகாராஷ்டிரா மாநிலங்கள் வளர்ச்சி திருப்தி அளிக்கிறது. இது போல் மற்ற மாநிலங்கள் ஏன் செயல்பட முடியவில்லை என்றார்.

TAGS: