இந்திய தூதரகத்தை உளவு பார்த்த அமெரிக்க புலனாய்வு துறை

india02713aவாஷிங்டன்: இந்திய தூதரகம் உள்ளிட்ட, 38 தூதரகங்களை அமெரிக்கா உளவு பார்த்ததாக, லண்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ.,வின் முன்னாள் கணினி நிபுணர், எட்வர்டு ஸ்னோடென்.

சமீபத்தில், அமெரிக்க புலனாய்வு ரகசியங்கள் பலவற்றை அம்பலப்படுத்தினார். தற்போது இவர், ரஷ்யாவில் பதுங்கியுள்ளார். இவரை ஒப்படைக்கும் படி, அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது.

அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ., சேகரித்த விஷயங்களை, ஜெர்மன் பத்திரிகைக்கு, ஸ்னோடென் வழங்கியிருந்தார்.

இதை மேற்கோள் காட்டி, அந்த பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக, லண்டனிலிருந்து வெளிவரும், “கார்டியன்’ பத்திரிகை செய்தியில், “அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் உள்ளிட்ட, 38 நாடுகளின் தூதரகங்களை, என்.எஸ்.ஏ., உளவு பார்த்துள்ளது.

தூதரக ங்களின் இன்டெர்நெட் கேபிள்களில், நவீன ஆன்டெனாக்களை இணைத்து, அதன் மூலம் தகவல்களை சேகரித்துள்ளது’ என, குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த செயல் குறித்து விளக்கம் அளிக்கும் படி, ஐரோப்பிய நாடுகள் வற்புறுத்தியுள்ளன.

TAGS: