பாகிஸ்தானில், மழையில் நனைந்து நடனம் ஆடிய சகோதரிகளை, தலிபான் ஆதரவு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுமிகள் ஆடும் காட்சிகள், இணையதளத்தில் வெளியானதைப் பார்த்த பயங்கரவாதிகள், அவர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்.
பாகிஸ்தானில் பழமைவாத கருத்துகளை பின்பற்றும், தலிபான் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள், ஏராளமானோர் உள்ளனர். காதல் திருமணம், பிற ஆண்களுடன் பழக்கம் வைத்திருந்தது, தனியாக வெளியிடம் சென்றது, பள்ளி, கல்லூரி சென்று படித்தது, நவநாகரிக உடை அணிந்தது போன்ற செயல்களுக்காக, கடந்த ஆண்டில் மட்டும், 900 சிறுமிகள், பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள, சிலாஸ் என்ற இடத்தில், ஆறு மாதங்களுக்கு முன், தங்கள் வீட்டின் வெளியே, மழையில் நனைந்தபடி, ஆடிப் பாடிய, நூர் பஸ்ரா, 15, நூர் ஷேசா, 16, என்ற இரு சிறுமிகளின் படங்கள், இணையதளத்தில் வெளியாகியிருந்தன.
அந்தக் காட்சிகளில், மழையில் நனையும் அச்சிறுமிகள், பாரம்பரிய உடைகளை அணிந்தபடி, சிரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தக் காட்சிகளைப் பார்த்த, தலிபான் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள், நேற்று முன்தினம், சிறுமிகளின் வீட்டுக்குள் நுழைந்து, தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வீட்டுக்குள் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள், அந்த சிறுமிகளை நோக்கி, துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக் கொன்று வெளியேறியுள்ளனர். முன்னதாக, சகோதரிகளை சரியாக வளர்க்கத் தவறியதாக, அவர்களின் சகோதரச் சிறுவனை, பயங்கரவாதிகள் கண்டித்தனர்.
முட்டாள் தனமான செயல். இதையும் கடவுளுக் காக
செய்கிறோம் என்பார்களா? முட்டாள்கள்.