பட்டியாலா மகாராஜாவின் வெள்ளிப் பாத்திரங்கள் ஏலம்

india05713bபாட்டியாலா மகாராஜாவின் விருந்து பரிமாறும் பாத்திரங்கள் ( டின்னர் செட்) லண்டனில் ஏலத்துக்கு வருகிறது.

சுமார் 500 கிலோ எடையுள்ள தங்கம் பூசப்பட்ட வெள்ளிப் பாத்திரங்களுக்கு ஏலத்தில் 1.5 மில்லியன் டாலர்கள் முதல் 2.3 மில்லியன் டாலர்கள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுவதாக கிரிஸ்ட்டிஸ் ஏல நிறுவனம் கூறுகிறது.

அவ்வகையில் மொத்தம் 1400 பாத்திரங்கள் பாட்டியாலா மகாராஜாவின் விருந்து உபசரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பாட்டியாலாவுக்கு 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் விஜயம் செய்ததை ஒட்டி இந்த வெள்ளிப் பாத்திரங்களை செய்யுமாறு பாட்டியாலா மகாராஜா புபீந்தர் சிங் உத்தரவிட்டார்.

உணவு வைக்கும் பாத்திரங்கள், தட்டுகள், ஸ்பூன்கள் என சிறிதும் பெரிதுமாக இருக்கும் இந்தப் பாத்திரங்கள் ஒவ்வொன்றிலும் பல அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மகாராஜா புபீந்தர் சிங், சுகபோக வாழ்வில் திளைத்தவர். சொந்தமாக விமானம் வைத்திருந்த முதல் இந்தியரான இவரிடம் 20 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருந்தன. -BBC

TAGS: