சீனாவின் கோபத்தை இந்தியா தூண்டக்கூடாது : சீன தளபதி கொக்கரிப்பு

india05713cபீஜிங்: “”எல்லை பிரச்னையில், சீனாவின் கோபத்தை இந்தியா தூண்டக்கூடாது,” என, சீன ராணுவ தளபதி லுயோ யுவான் தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, சீன பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்திய – சீனா எல்லை பிரச்னை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, அந்நாட்டு ராணுவ அமைச்சருடன் இன்று அவர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

இதற்கிடையே, சீன ராணுவ தளபதி லுயோ யுவான், நிருபர்களிடம் கூறியதாவது: இரு நாட்டுக்கிடையே உள்ள எல்லை பகுதியில், 90 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பு இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எல்லை பகுதியில், ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை இந்தியா அதிகரித்து, சீனாவின் கோபத்தை கிளறக்கூடாது.

சீனாவின் அச்சுறுத்தலால் தான், ராணுவ செலவை அதிகரித்துள்ளதாக இந்தியா கூறுகிறது. எதைக் கூற வேண்டும், எதை கூறக்கூடாது, என்ற விஷயத்தில் இந்தியா எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு, யுவான் கூறினார்.

TAGS: