எல்லை பாதுகாப்பில் பெண் கமாண்டோ: இந்திய வரலாற்றில் புதிய ஏற்பாடு

india08713bபுதுடில்லி: பாதுகாப்பு துறையில் பெண்கள் பல விதமாக அங்கம் வகித்தாலும் எல்லை பாதுகாப்பில் பெண் அதிகாரிகள் இது வரை நியமனம் செய்யப்படாமல் இருந்தனர். இந்த குறை இப்போது நிறைவு பெறுகிறது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் வட்டாரம் கூறியதாவது: இதுவரை மத்திய ரிசர்வ் படை மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் பல்வேறு பணிகளை பெண் அதிகாரிகள் இடம் பெற்று தங்களின் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். மத்திய எல்லை பாதுகாப்பு படையில் பெண்கள் இடம் பெறாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சகம் இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது.

பாகிஸ்தான், வங்கதேச எல்லையில் : இதன்படி 25 மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த துறைக்கு பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த படையில் தற்போது உதவி கமாண்டோக்கள் பொறுப்பில் நியமிக்கப்படுவர் . இவர்கள் முதல் கட்டமாக பாகிஸ்தான், வங்கதேச எல்லையில் பணியை மேற்கொள்வர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான நியமனம் செய்யப்பட்டு விடும். இது வரை ஏனைய துறையில் இடம் பதித்துள்ள பெண்கள் இந்த துறையிலும் ஆண்களை விட சிறப்பாக பெண்கள் செயல்படுவர் என தாம் நம்புவதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.

TAGS: