ஆசிட் வீச்சு வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

india09713bபுதுடில்லி: பெண்கள் மீதான ஆசிட் வீச்சு தாக்குதலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக ஆசிட்வீச்சு தாக்குதல் உள்ளிட்ட வன்‌கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான வழக்குகள் சில மாநிலங்களில் நிலுவையில் உள்ளன.

இதில் ஆசிட் விற்பனையை ஏன் தடை செய்யக்கூடாது என கடந்த ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் விசார‌ணக்கு வந்தது.
அப்போது ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்தவும், புதிய வழிமுறைகளை கொண்டு வரவும், மாநில அரசுகள் விரிவான அறிக்கையினை வரும் ஜூலை 9-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்ய தவறினால், சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

இந்நிலையில் டில்லியைச் சேர்ந்த லட்சுமி என்பவர்,கடந்த 2006-ம் ஆண்டு ஆசிட் வீச்சு சம்பவத்தில் பாதிப்பிற்குள்ளானார்.இவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதில் ஆசிட் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தனக்கு இழப்பீடு வழங்கிட உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு, பெண்கள் மீது ஆசிட்வீச்சு சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. ஆசிட் வீச்சால் பெண்கள் பலியானாலும் கவலைப்படுவதாக தெரியவில்லை. இதில் மத்திய அரசின் செயல்பாட்டை பார்த்தால் உருப்படியான நடவடிக்கை இல்லை என்றே தெரிகிறது.

மத்திய அரசும், மாநில அரசுகளும் பெண் மீதான ஆசிட் வீச்சு சம்பவத்தை சீரியசாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. இவற்றை தடுக்க ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

இது தொடர்பாக மாநில அரசுகளுடன் ஆலோசித்து, அறிக்கை தாக்கல் செய்வதாக மத்திய அரசு தெரிவித்தது. இன்னும் தெரிவிக்காமல் இருப்பது சரியல்ல.எனவே ஒருவார காலத்திற்குள் ஆசிட் விற்பனையை ஒழுங்குபடுத்தி கடுமையான விதிமுறைகளை வகுத்து உரிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.Click Here

TAGS: