இந்தியாவில் இனி குற்றவாளிகள் யாரும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது

india11713bஇந்தியாவில் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள யாரும் இனி சட்டமன்றத்திலோ நாடாளுமன்றாத்திலோ பதவி வகிக்க முடியாது என்று இன உச்சநீதிமன்ற்ம் தீர்ப்பளித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திலுள்ள பிரிவு 8(4) கீழ் கொடுக்கப்பட்டுள்ள விதிவிலக்கு செல்லுபடியாகாது என்று நீதிபதிகள் ஏ கே பட்நாயக் மற்றும் எஸ் ஜே முகோபாத்யாய அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தால் வழக்கு ஒன்றில் ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவர் உடனடியாக பதவியிழப்பார் என்று நீதிபதிகள் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாகக் கூறினாலும் அந்த நபர் இந்தத் தீர்ப்பின்படி பதவியிழப்பார்.

எனினும் இந்தத் தீர்ப்பு தங்களது இன்றையத் தீர்ப்பு வருவதற்கு முன்னர் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு பொருந்தாது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது என்றும், இதன் மூலம் இனி வரும் தேர்தல்களில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் அல்லது நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களுக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் வழங்க கட்சிகள் தயங்கும் என்றும் இந்தியாவின் ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையாளர் என் கோபாலஸ்வாமி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அடுத்த சில மாதங்களில் தற்போது பதவியிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பை வழங்கினால் அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இந்திய அரசியல் சாசனத்திலுள்ள ஒரு பிரிவுக்கான விளக்கம் என்பதால் இதை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ஒரு சிறப்புச் சட்டத்தை கொண்டுவரவும் முடியாது என்றும் கோபாலஸ்வாமி தெரிவித்தார். -BBC

TAGS: