இந்தியாவை ஒட்டியுள்ள எல்லையில் ரோந்து செல்வதை மாற்ற முடியாது: சீன வெளியுறவு அதிகாரி விளக்கம்

india11713cபீஜிங்:“இந்தியாவை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில், வழக்கமான ரோந்து பணியில் ஈடுபடும் திட்டத்தை, மாற்றிக் கொள்ள முடியாது’ என, சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்கும், இந்தியாவுக்கும், நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை உள்ளது.கடந்த, ஏப்., 20ம் தேதி, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின், லே பகுதியில் நுழைந்த, சீன ராணுவ வீரர்கள், 21 நாட்கள் அங்கேயே முகாமிட்டு, எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தினர்.

இந்நிலையில், லே பகுதியின் மற்றொரு இடமான, சுமர் என்ற இந்திய கிராமம் அருகே, சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, அட்டூழியம் புரிந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையே, எல்லைப் பிரச்னை இருப்பதால், சுமர் பகுதியில், இந்திய ராணுவம், கேமராக்களை பொருத்தி, சீன ராணுவ நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது.

அது போல், அங்கு பல பதுங்கு குழிகளையும் அமைத்துள்ளது.கடந்த, 17ம் தேதி, அங்கு வந்த சீன ராணுவத்தினர், கேமரா ஒயர் இணைப்புகளை துண்டித்து, பதுங்கு குழிகளை தகர்த்து, அட்டூழியம் புரிந்துள்ளனர்.

இதுகுறித்து, சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி ஹுவா கூறியதாவது:இந்தியாவை ஒட்டியுள்ள சீன எல்லை பகுதியில், வழக்கமான ரோந்து பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதில் மாற்றம் ஏதும் செய்ய முடியாது.

தற்போது அங்கு என்ன நடந்துள்ளது, என்ற விவரம் எனக்கு தெரியாது.எல்லை விவகாரத்தில், அமைதியையும், ஒத்துழைப்பையும் அளிக்கவே சீனா விரும்புகிறது.இவ்வாறு, ஹுவா கூறினார்.Click Here

TAGS: