உ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே !

india12713cலக்னோ : சாதி சொல்லி அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு அதிரடியாக அலகாபாத் கோர்ட் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் பல்வேறு அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்திருந்தாலும், காங்., மற்றும் பா.ஜ., வரவேற்றுள்ளது.

சாதி பெயரால் பேரணி நடத்துவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதுடன் ஆங்காங்கே மோதல்களும் வெடித்து வருகின்றன, இது போன்ற பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் உமாநாத்சிங் மற்றும் மகேந்திரதயாள் ஆகியோரை கொண்ட பெஞ்ச் , தனது முடிவை அறிவித்தது. இது போன்ற சாதி பேரணிக்கு தடை விதிப்பதாகவும், தொடர்ந்து இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தீர்ப்பளித்தது.

மேலும் இது போன்ற பேரணியால்,நாட்டில் பிரச்னைகள் எழுவதும், மேலும் பிரிவினை போக்கை அதிகரிப்பதையும் மேற்கோள் காட்டியுள்ளது. இது குறித்து மாநிலத்தில் உள்ள கட்சிகள் மற்றும் தேர்தல் கமிஷன், மாநில அரசு ஆகியோருக்கு விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு காங்.,கட்சி பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவால் நாட்டின் ஒற்றுமை வலுப்பெறும் என்றும் இதற்கு மகிழ்ச்சி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது. சாதி சொல்லி அரசியல் நடத்தும் கட்சிகள் இது வரை தங்களின் கருத்துக்களை வெளியே தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றன.

தமிழகத்தில் இது போன்ற சாதிக்கட்சிகளுக்கு சவுக்கடி கிடைக்குமா இந்த கோர்ட் உத்தரவை பின்பற்றி தமிழகத்திலும் கோர்ட் மூலம் ஆணை பெற முடியுமா என சமூக ஆர்வலர்கள் வழிமொழிய காத்திருக்கின்றனர். தமிழகத்திலும் வந்தால் சாதி பேரணி வன்முறை குறைவதுடன் போலீசாரும் நிம்மதி பெருமூச்சு விட முடியும். நடக்குமா ?

வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் உ .பி.,யில் மொத்தம் 80 சீட்கள் இங்கு இருப்பதால், சமீபத்திய உத்தரவு சாதிக்கட்சியை கடுமையான பாதிப்புக்குள் தள்ளும்.

TAGS: