ஆப்கான்: வெளியேறுகிறது அமெரிக்கா: உதவுகிறது இந்தியா

india13713aபுதுடில்லி: ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் வரும் 2014 -ம் ஆண்டு இறுதிக்குள் முற்றிலுமாக ‌வெளியேற உள்ள நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தானை கட்டு்ப்படுத்துவதற்காக ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி மற்றும் ராணுவத்திற்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவதற்காக நேட்டோ நாடுகளை சேர்ந்த படைகள் ஆப்கான் ராணுவம் மற்றும் அரசுக்கு உதவி செய்து வந்தன.

தற்போதைய சூழ்நிலையில் தாலிபான்களின் நடமாட்டம் குறைந்த நிலையில் இருப்பதால் நேட்டா அமைப்பு நாடுகள் ஒவ்வொன்றும் தங்களது படைகளை ஆப்கானில் இருந்ஆது வாபஸ் பெற துவங்கியுள்ளது. இந்நிலையில் வரும் 2014-ம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவும் தங்களுடைய படைகளை வாபஸ் பெற்றுகொள்ளவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவ‌ே வரலாற்று ரீதியாக ஆப்கானிஸ்தானிற்கும் இந்தயாவிற்கும் தொடர்பு இருந்து வரும் நேரத்தில் தற்போதும் இந்தியா அரசியல் ரீதியாகவும், பொருளாதார வளர்ச்சிக்கும் பல்வேறு நலத்திட்டங்‌களை செயல்படுத்தி வருகிறது.

மேலும் சமீப காலமாக பாக்-இந்தியா இடை‌யே நிலவி வரும் எல்‌லைப் பிரச்னையில் ஆப்கானிஸ்தானின் தீவிரவாத இயக்கத்திற்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்துவருவதாக இந்திய ராணவம் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

சீன அரசு பாகிஸ்தானி்ன் துறைமுகப்பகுதிகளில் தனது ஆதரவை அளித்து வருவது இந்தயாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் வேளையில் ஆப்கானிஸ்தானில் தனக்கென ஒரு பாதுகாப்பு மையத்தை உருவாக்கி கொள்ள இந்தியா முற்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆப்கானி்ஸ்தானின் ராணுவத்திற்கு பல்வேறுகட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி ராணுவத்தில் சிக்னல்களை கையாளுதல், உளவுத்‌துறை பயிற்சி , தகவல் தொழில்நுட்பம், போர் கள மருத்துவ உதவி, ஆங்கில பயிற்சி அளிப்பது போன்றவற்றை செய்து வருகிறது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்ன்னர் இந்தியா வந்திருந்த ஆப்கான் அதிபர் இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தி்ன்படி ராணுவ சிவிலியன் குழுவின் ஆப்கானில் காந்த கார் நகரம் உட்பட்ட ‌பல்வேறு நகரங்களி்ல் ராணுவ உபகரணங்கள், மற்றும் வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் தொலைதொடர்புசாதனங்கள்‌ போன்றவற்றை அளித்துள்ளது.

கடந்த 2012-13-ம் ஆண்டில் சுமார் 574 ஆப்கான் ராணுவத்திற்கு இந்திய தரப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போதைய ஆண்டான 2013-14 -ல் இவை இருமடங்காக அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையி்ல் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு வருகை தரும் ஆப்கான் ராணுவ உயர் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளனர்.Click Here

TAGS: