தெலுங்கானாவுடன் கூர்காலாந்தையும் பிரிக்க வேண்டும்: மீண்டும் போராட்டத்தை துவக்க முடிவு

india15713aடார்ஜிலிங்: தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து கூர்காலாந்து பகுதியையும் பிரித்து தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.

ஆந்திராவை போன்றே , மேற்குவங்க மாநிலத்தில் கூர்காலாந்து, டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை தனிமாநிலமாக்க கோரி பல கட்டங்களாக போராட்டம் வலுத்து வருகிறது. எனினும் முதல்வர் மம்‌தா பானர்ஜி, மேற்கொண்ட முயற்சியால் , அந்த கோரிக்கை கைவிடபட்டு கூர்காலாந்து சுயாட்சி நிர்வாக கவுன்சில் அமைக்கப்பட்டது.

மீண்டும் வலுப்பெறும் கூர்காலாந்து: தற்போது ஆந்திராவில் தீவிரமடைந்துள்ள தெலுங்கானா விவகாரத்தில் ஒரு மாதத்தில் முடிவு ‌எட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது மேற்கு வங்க மாநிலத்திலும் எதிரொலித்துள்ளது. இது தொடர்பாக ‌கூர்காலாந்து ஜன்முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் செய்தியாளர்கள் கூட்டம் நடந்தது.

கூர்காலாந்து ஜான்முக்கதி மோர்சா அமைப்பின் பொதுச்செயலர் ரோஷன்கிரி கூறுகையில், ஆந்திராவை இரண்டாக பிரித்தால் எங்கள் மாநிலத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி நாங்கள் மீண்டும் போராட்டத்தை துவக்குவோம்.

நேரமும் காலமும் வந்தால் மேற்குவங்க மாநிலத்தையும் பிரி்த்தே ஆக வேண்டும். நாளை இறுதி முடிவு எடுக்க உள்ளோம். மேலும் கூர்காலாந்து தனி மாநிலம் கோரி, காங். தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுப்போம் என்றார்.

தெலுங்கானாவுடன் கூர்காலாந்தையும் பிரி்க்க வேண்டும்: கூர்காலாந்து விவகாரம் மீண்டும் மேற்கு வங்கத்தில் சூட்டை கிளப்பியுள்ள நிலையில், கூர்காலாந்து ஜான்முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் பீமல் கூரங், கூறுகையில், மத்திய அரசு ஆந்திராவை பிரிக்க நடவடிக்கை எடுத்தால், கூர்காலாந்தினையும் சேர்த்து பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டி விவாதித்து , தனி மாநில கோரிக்கை தொடர்பாக மீண்டும் மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். பொதுத்தேர்தல் வருவதால் ஆந்திராவில் தெலுங்கானா விவகாரத்தை மத்திய அரசு முடித்து வைக்க பகீரத முயற்சி எடுத்து வரும் வேளையில் தற்போது கூர்காலாந்து விவகாரம் மத்திய அரசுக்கு தலைவலியை கொடுக்க துவங்கியுள்ளது.Click Here

TAGS: