ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்துமாறு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

india19713aஇந்தியாவில் பெண்கள் மீது ஆசிட் (திராவகம்) வீசப்படுவதை குறைக்கும் முயற்சியாக, மத்திய அரசும் மாநில அரசுகளும் ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செல்லுபடியான அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஆசிட் விற்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறான விற்பனைகள் பற்றி போலிஸுக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

ஆசிட் எதற்குத் தேவைப்படுகிறது என்பதை வாங்குபவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆசீட் வீச்சுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மறுவாழ்க்கைக்காக மாநில அரசுகள் மூன்று லட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ஆயிரம் பேர் அளவில் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளாவதாக கணக்கிடப்பட்டுள்ளது.பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களே.

பெரும்பாலும் காதலர்களையும் கணவன்மாரையும் அல்லது தொழில்வழங்குநர்களையும் நிராகரிப்பவர்கள் மீதே இப்படியான ஆசிட் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. -BBC

TAGS: