சென்னை: எம்.ஜி.ஆர்., காலம் முதல் இன்றைய இளம் நடிகர் வரை பல ஆயிரம் பாடல்களை எழுதிக்குவித்த பிரபல கவிஞர் வாலி இன்று இல்லை. இவருக்கு வயது 82 . வாழ்த்துப்பா பாடுவதில் மிகவும் நுண்ணிய வார்த்தைகளை பிரயோகிப்பது இவருக்கு கை வந்த கலை. தமிழக அரசின் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். நேரத்திற்கு ஏற்றால் போல் நினைத்த உடன் கவிதைகளை கொட்டி போடும் திறம் படைத்தவர் வாலி.
தரைமேல் பிறக்க வைத்தான்: இவர் எழுதிய பாடல்களில் சரித்திரத்தில் மறையாத பாடல்கள் ஆயிரம் உண்டு. புதிய வானம் புதிய பூமி, ஏமாற்றாதே ஏமாறாதே, வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கைகளில்,, கண் போன போக்கிலே கால் போகலாமா, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை, நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன், மன்னிக்க வேண்டுகிறேன், தரைமேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் , இறைவா உன் மாளிகையில், நான் மலரோடு தனியாக ஏன், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், அம்மா என்றழைக்காத உயிர் இல்லையை, மாதவி பொன்மயிலாள் தோகை விரித்தாள், அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே வந்ததே நண்பனே, கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. இது போன்ற பாடல்கள் ஏராளம்.
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் என்ற இவர் எழுதிய பக்தி பாடல் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா., யாரோடு யார் வந்தது நான் போகும் போது யாரோடு யார் வந்தது. என்ற பாடல் அனைவரது உள்ளத்தையும் வருத்தும்.
கடந்த ஜூன் 14 முதல் நுரையீரல் தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். இவர் கடந்த ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். இன்று அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இவரது மறைவுக்கு திரை உலகத்தினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிறந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். இவரது தத்துவ வார்த்தைகள் கொண்ட பாடல்கள் எம்.ஜி.ஆரை மக்களிடம் பிரபலப்படுத்த பெரிதும் உதவியாக இருந்தது. தமிழ் சினிமா உலகில் வாலிப கவிஞர் என அழைக்கப்பட்ட கவிஞர் வாலி இதுவரை சுமார் 15 ஆயிரம் பாடல்கள் வரை எழுதியுள்ளார். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரை உலகில் ஜொலித்தவர். இவரது படைப்புகள் என்றும் ஜொலிக்கும்.
வாலி சார், உங்கள் புகழ் என்றும் மறையது. நன்றி உங்களுக்கும் , உங்களை கொடுத்த கடவளுகும்.
கவிதைகள் சாவதில்லை. அவை உங்களை நீடூழிய வாழ வைக்கும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றேன்.
தரை மேல் பிறக்க வைத்தான் பாடலை மறக்க முடியுமா கவிஞரே! உங்களையும் மறக்க முடியாது, அந்தப் பாடலைப் பாடிய டி.எம். எஸ். சையும் மறக்க முடியாது, விஸ்வநாதன் ராமமூர்த்தியையும் மறக்க முடியாது, எம்.ஜி.ஆரையும் மறக்க முடியாது! என்றென்றும் நீர் வாழ்வீர்!
கவியார் வாலியே உன் பாடல் காலத்தால் அழியாதது, நீ மறைதாலும் உன் பாடல்கள் மாறைய
“வையத்துள் வழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”
இன்று அவர் மறைந்திருந்தாலும் அவர் புகழ் நீடித்து நிற்கும்.மனிதன் வாழ வேண்டிய முறைபடி வாழ்ந்த இவர்,தெய்வத்தோடு இணைந்து எல்லா உயிர்களுக்கும் அருள் புரியட்டும்..
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திகின்றோம்.
கவிஞர் ஆத்மநாபன் மறைந்த சில தினங்களில் வாளியாரின் மறைவு தமிழ் இனத்திற்கு பேர்யிலப்பு.