பா.ஜ.க. நிர்வாகி கொலை: தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு

india21713cசென்னை: தமிழக பா.ஜ.க. பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் நேற்று முன்தினம் சேலத்தில் படுகொலை செய்யப்பட்டதற்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:கடந்த ஓர் ஆண்டாக தமிழகத்தில் இந்து இயக்கத் தலைவர்களும், பா.ஜ.க., தலைவர்களும் படுகொலைக்கும், ஆயுதத் தாக்குதலுக்கும் உள்ளாகி இருக்கிறார்கள்.

2 ஆண்டுகளுக்கு முன் ரமேஷ் வீட்டில் இருந்த கார் அடையாளம் தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டது. அப்போதே ரமேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால், இந்தக் கொலைச் சம்பவம் நடந்திருக்காது.

பந்த்.,திற்கு அ‌ழைப்பு: தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் இந்தக் கொலை வெறி தாக்குதல்களை கண்டிக்கும் வகையில் ஜூலை 22-ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளதாகவும்,இதற்கு அனைத்து அரசியல் கட்சிகள், வணிகப் பேரவை மற்றும் தொழில் நிறுவனங்களும் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக டில்லியில் அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: தமிழக பாஜக பொதுச் செயலர் ஆடிட்டர். ரமேஷ் நேற்று முன்தினம் சேலத்தில் படுகொலை செய்யப்பட்டார். 1991-ஆம் ஆண்டு முதல் அவர் தமிழக பாஜகவில் பணியாற்றி வந்தார். இது ஒரு திட்டமிட்ட கொலை.

தமிழக அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து இத்தாக்குதல்கள் குறித்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும். பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பவர்களுக்கு தமிழக அரசு போதிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்த படுகொலை சம்பவத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தேசிய தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொலைக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரடியாகத் தலையிட்டு சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.Click Here

TAGS: