டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் முன்னால் நடத்தப்படவிருக்கும் ஆர்பாட்டம் இலங்கை தொடர்பான இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் தெரிவித்தார்.
இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆகஸ்ட் 8-ந் தேதி டெசோ அமைப்பின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் “தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்” நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய தலைநகர் புது தில்லியில் இந்திய நாடாளுமன்றத்தின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக தலைமையகம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புது தில்லியில் திமுக நடத்தும் இந்த ஆர்பாட்டம் அரசியல் நோக்கங்களுக்கானதல்ல என்று கூறிய திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம், கண்டிப்பாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் இலங்கை தொடர்பான அணுகுமுறையில் மாற்றத்தை தமது கட்சியால் ஏற்படுத்த முடியும் என்று கூறினார். -BBC
டெசோ தமிழர் நட்டு தமிழர்களை அரசியல் ரூபத்தில்
கற்பழிக்கும் ஒரு ஏமானி கமனட்டி கூட்டம்