நாடாளுமன்றத் தேர்தலுக்கு மதச்சாயம் பூச காங்கிரஸ் முயற்சி!

arun jedliபுதுடில்லி: 2014ஆம் ஆண்டு நடைபெற உள்ள ‌லோக்சபா தேர்தலுக்கு மதச்சாயம் பூசுவதற்கு காங்கிரஸ் முயற்சி செய்கிறது என பா.ஜ.க. மூத்த தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இணையதளம் ஒன்றில் தனது கட்டுரையில் எழுதியிருப்பதாவது:ஐ.மு., கூட்டணியானது ஆட்சி நிர்வாக நெருக்கடி, சரியான தலைமை இல்லாதது ஆகிய இரு பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது.

எனவே, அவர்களுக்கு தேர்தலைச் சந்திக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு மதச்சாயம் பூசுவதற்கு காங்கிரஸ் முயற்சி செய்கிறது.

இதன்மூலம் தேர்தலுக்கான உண்மையான செயல்திட்டத்தை மாற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை ஆட்சியை விட்டு அகற்ற நினைக்கும் அனைவரும் தாங்கள் நிர்வாக ரீதியிலான பிரச்னைகளையே ஓட்டுப்போடும் போது மனதில் கொள்ள வேண்டும்.

வரலாற்றை மாற்ற முயற்சி: இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு குறித்து ஷகீல் அகமது தெரிவித்துள்ள கருத்து மூலம், அவர் வரலாற்றை மாற்றி எழுத முயன்றுள்ளார். குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் அமைப்புதான் அது என்பது போல் காட்ட அவர் முனைந்துள்ளார். அந்த அமைப்பை உருவாக்க பாகிஸ்தான் சதி செய்ததை அவர் கண்டுகொள்ளவில்லை. தேசியப் பாதுகாப்புப் பிரச்னையை மதவாதமாக மாற்றும் மற்றொரு முயற்சிதான் இது என்று அருண் ஜேட்லி எழுதியுள்ளார்.Click Here

TAGS: