7 மாதங்களில் 150 முறை அத்துமீறிய சீன ராணுவம்!

india24713cபுதுடில்லி: இந்த ஆண்டின், ஏழு மாதங்களில், இந்திய பகுதிக்குள், சீன ராணுவம், 150 முறை அத்துமீறி நுழைந்துள்ளது என்ற, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அண்டை நாடான சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே, தெளிவான எல்லை, இன்னும் வரையறுக்கப்படவில்லை. தற்காலிக எல்லை மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில், எவ்வித தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, இந்தோ – திபெத் எல்லை போலீஸ் படையினருடன் இணைந்து, இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ளது.

இதை அறிந்த பிறகு, அந்தப் பகுதிகளில், இந்த ஆண்டில் மட்டும், 150 முறை, சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து, அங்கு காவலில் உள்ள இந்திய வீரர்களிடம், “இது எங்கள் பகுதி; அமைதியாக வெளியேறுங்கள்’ என, பதாகைகளை காட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது.

கடைசியாக, 20ம் தேதி அத்துமீறிய சீன ராணுவ குதிரைப்படை வீரர்கள், நீண்ட நேரம் அங்கேயே இருந்து, சண்டைக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்; பிறகு, தானாக அங்கிருந்து சென்றனர்.

கடந்த மாதம், லே பகுதியில், 20 நாட்கள் முகாமிட்ட சீன ராணுவத்தினரை அங்கிருந்து அப்புறப்படுத்த, இந்திய பகுதியில் செய்யப்பட்டுள்ள பதுங்கு குழிகள் மற்றும் பிற ஏற்பாடுகளை வாபஸ் பெறுவதாக இந்திய தரப்பில் உறுதியளிக்கப்பட்டது; அதற்குப் பிறகே, சீன ராணுவத்தினர் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.Click Here

TAGS: