பள்ளி மதிய உணவு திட்டத்தில் பங்கேற்க பிஹார் ஆசிரியர்கள் மறுப்பு

india25713aஇந்தியாவின் பிஹார் மாநிலத்தில் பள்ளியில் மதிய உணவு உண்ட பிள்ளைகள் 23 பேர் சென்ற வாரம் பலியான நிலையில், அரசாங்க இலவச மதிய உணவு திட்டத்தில் பங்கேற்க அம்மாநிலத்தின் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மறுத்துள்ளனர்.

இத்திட்டத்தில் ஊழல் புரையோடிப்போயுள்ளது என்றும், போதுமான உதவி இன்றியும், தரம் குறைவான உணவுப் பொருட்களைக் கொண்டும் இது நடத்தப்படுகிறது என்றும் ஆசிரியர்கள் சங்கம் குற்றம்சாட்டுகிறது.

இப்படியான திட்டத்தில் தவறேதும் நடந்தால் அதற்கான பழியை ஆசிரியர்கள் சுமக்க நேரிடுகிறது என அச்சங்கம் கூறுகிறது.

இலவச மதிய உணவு திட்டத்தை நடத்த தனியொரு கட்டமைப்பை ஏற்படுத்துமாறு ஆசிரியர்கள் அரசாங்கத்தினரை கோரியுள்ளனர்.

சென்ற வாரம் நடந்த சம்பவம் நடந்த இடத்தில் பரிமாறப்பட்ட உணவில் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டதாக ஆய்வுகள் காட்டியுள்ளன.,

இந்த உயிரிழப்புகள் சம்பந்தமாக குறிப்பிட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் பொலிசாரால் தேடப்பட்டுவருகிறார். -BBC

TAGS: