ராஜ்யசபா எம்.பி.,க்கு விலை ரூ.100 கோடி ! காங்கிரஸ் எம்.பி., ரகசியத்தை உடைக்கிறார்

india29713aபுதுடில்லி : நாட்டில் உள்ள பிரபலங்கள் ராஜ்யசபா எம்.பி.,யாக வேண்டுமென்பதற்காக 100 கோடி வரை செலவிட தயாராக இருப்பதாக காங்., கட்சியை சேர்ந்த சவுத்திரி பிரேந்திரசிங் எம்.பி., என்பவர் கூறியுள்ள தகவல் டில்லி அரசியலில் கல கலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் மாநில வாரியாக எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுக்கள் மூலம் பார்லி.,க்கு ராஜ்யசபா எம்.பி.,க்கள் அனுப்பி வைக்கப்படுவர். குறிப்பாக அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் நிற்க முடியாதவர்களும், கல்வி, தொழில் , சேவை மற்றும் கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்கள் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுவர்.

சமீபத்தில் கூட தமிழகத்தில் இருந்து கனிமொழி , மைத்ரேயன், அர்ஜூனன், டி.ராஜா உள்ளிட்ட 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் கனிமொழி தவிர ஏனைய 5 பேர் ராஜ்யசபா எம்.பி.,க்களாக பொறுப்பேற்று கொண்டனர்.

இந்நிலையில் காங்., மூத்த எம் .பி., பிரேந்திரசிங் என்பவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில்: அரசியலில், ராஜ்யசபா தேர்தலில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியும். எம்.பி., பதவியை பெற நான் 100 கோடி வரை செலவிட தயாராக இருந்தேன். எனக்கு 80 கோடி வரை செலவானது. பலரும் 100 கோடி வரை செலவிட தயாராக இருக்கின்றனர்.

உயர்ந்த பதவிக்கு வருவதற்கும் இதன் மூலம் பலன் பெறுவதற்கும் பணம் செலவழிக்க தயாராக இருக்கின்றனர்.100 கோடி இருந்தால் எம்.பி., பதவியை வாங்க முடியும் என்றார்.

இவரது கருத்து குறித்து அரசியல் பிரமுகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். காங்., செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவேட்கர் கூறுகையில்: காங்கிரஸ் கட்சி எல்லா மட்டத்திலும் ஊழல் செய்கிறது என்பதை அவர் ஒத்துக்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சி செய்யும் ஊழலில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. காங்.,கட்சியில் நடப்பதை எம்.பி., கூறியுள்ளார். இவ்வாறு ஜவேட்கர் கூறினார்.

TAGS: