பிரதமரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும்: அன்னாஹசாரே

anna hasareகோண்டா, (உத்தரபிரதேசம்), ஜூலை 29–

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்து எடுக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அதிகாரம் வாய்ந்த பதவியான பிரதமரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கிறார்கள்.

இந்த நிலையில் சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே பிரதமரை மக்களே நேரடியாக தேர்ந்து எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

ஜன தந்திர யாத்திரையை தொடங்கி வைப்பதற்காக உத்தரபிரதேசம் சென்றுள்ள அன்னா ஹசாரே இது குறித்து கூறியதாவது:–

நமது நாட்டில் பிரதமரை மக்களே நேரடியாக தேர்ந்து எடுக்க வேண்டும் அப்படி பிரதமரை மக்களே நேரடியாக தேர்ந்து எடுக்கா விட்டால் நாடு நல்ல நிலையை பெறாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கோரி டெல்லியில் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

TAGS: