மோசமான பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும்

india31713aமனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்துகளை சந்தைகளில் இருந்து விலக்கிக்கொள்வதை உலக நாடுகள் துரிதப்படுத்த வேண்டும் ஐநாவின் உணவு மற்றும் விவசாயக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் பள்ளியில் சத்துணவு உட்கொண்ட 23 பிள்ளைகள் இம்மாதத்தில் முன்னதாக உயிரிழந்த நிலையில் இந்த அறிவிப்பு வருகிறது.

மிக அதிக நச்சுத் தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்து இந்த உணவில் கலந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பல உலக நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள ஒரு பூச்சிக்கொல்லி மருந்து இதுவாகும்.

இவ்வகையான ரசாயனங்கள் விற்கப்படுவதும் பயன்படுத்தப்படுவதும் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கின்றன என்று உணவு மற்றும் விவசாய கழகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் விவசாய உற்பத்தி குறையாமல் பார்த்துக்கொள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு அவசியம் என இந்திய அரசு கூறுகிறது. -BBC

TAGS: