முல்லை பெரியாறு வழக்கில் கேரள அரசின் போக்கு: சுப்ரீம் கோர்ட் கண்டனம்

mullaperiyar-dam-photoபுதுடில்லி: முல்லை பெரியாறு அணை விவகார வழக்கி்ல் கேரள அரசின் போக்கிற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.முல்லைப் பெரியாறு வழக்கில் சுப்ரீம் கோர்ட்,ஒரு தீர்ப்பு வழங்கிய பிறகு அதைச் செயல்படுத்தாமல் இருக்க தனியாகச் சட்டத் திருத்தம் மேற்கொண்ட கேரள அரசின் போக்குக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக அதிகரிக்க வேண்டும் என்று 2006-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. அதைச் செயல்படுத்தாமல் கேரள அரசு அம்மாநில சட்டமன்றத்தில் தனிச் சட்டம் கொண்டு வந்தது. அந்த நடவடிக்கையை விமர்சித்து மேற்கண்ட கண்டனத்தை நீதிபதிகள் தெரிவித்தனர்.

முல்லைப் பெரியாறு அணை வழக்கின் இறுதி விசாரணை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எச்.எல். தத்து, மதன் பி.லோகுர், சந்திரமௌலி குமார் பிரசாத், எம்.ஒய். இக்பால் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் நேற்று நடந்தது.

உரிமை கோர முடியாது:இந்த வழக்கில் கடந்த வாரம் தமிழக அரசுத் தரப்பு வாதத்தை உச்ச நீதிமன்றம் கேட்டது. அதைத் தொடர்ந்து, கேரள அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சால்வே நேற்று முன்வைத்த வாதம்:

முல்லைப் பெரியாறு அணையைக் கட்ட 1886-ல் திருவாங்கூர் சமஸ்தானத்துடன் மதராஸ் மாகாணம் மேற்கொண்ட ஒப்பந்தம், 1947-ல் இந்திய அரசு சட்டம் கொண்டு வரப்பட்டதும் முடிவடைந்துவிட்டது.

சட்டம் இயற்றியதில் தவறில்லை: அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று 2006-ல் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை ஏற்க இயலாது. அதைச் செயல்படுத்தாமல் இருக்க கேரள அரசு உடனடியாகச் சட்டம் இயற்றியதில் தவறு கிடையாது.

கேரள அரசுக்கு கண்டனம்:சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்புக்குப் பிறகு கேரள அரசு இயற்றிய அணைப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம், கோர்ட் தீர்ப்பை எவ்வாறு கட்டுப்படுத்தும்? அண்டை மாநிலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், கேரள அரசு எப்படித் தன்னிச்சையாகச் சட்டம் இயற்ற முடியும்? இப்போக்கு கோர்ட்டை விட உயர்ந்த அமைப்பு போல கேரளம் செயல்படுவதாக அமையாதா? 2003-ல் கொண்டு வரப்பட்ட அணைப் பாதுகாப்புச் சட்டம் குறித்து இந்த வழக்கில் இதுவரை கேரளம் ஏன் குறிப்பிடவில்லை?

.தண்ணீர் திறந்து விட கோர்ட் உத்தரவிட்டாலும், அதைச் செயல்படுத்த அரசியல் கட்சித் தலைவர்கள் மறுக்கின்றனர்’ என்று கேரள அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சால்வே குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆர்.எம். லோதா, “கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வெள்ள நீர் செல்கிறது. எனவே, காவிரி விவகாரத்தில் ஓராண்டுக்கு நீர் பங்கீட்டுப் பிரச்னை இருக்காது என்றார்.Click Here

TAGS: