ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, புதிய மாநிலமாக தெலங்கானா உருவாக்கப்படும் என்று டில்லியில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியான அறிவிப்பை அடுத்து , ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட , பல அரசியல்வாதிகள் பதவி விலகியுள்ளனர்.
வர்த்தக நிறுவனங்களும், பள்ளிக்கூடங்களும் , ஆந்திரப்பிரதேசத்தின் தெற்கு மற்றும் கடலோரப் பகுதிகளில், மூடப்பட்டுள்ளன.
போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசத்தின் தெலுங்கு பேசும் மக்களை இந்த மாநிலப் பிரிவினை இரண்டாகப் பிரிக்கும் என்று கூறி, அம்மாநிலத்தில் பலர் இந்த முடிவை எதிர்க்கின்றனர்.
ஆனால் மாநிலத்தின் வட பகுதியில் அமைந்திருக்கும் தெலங்கானாவில், இந்த புதிய மாநிலத்திற்கான போராட்டம் சுமார் 50 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பொருளாதார ரீதியில் தாங்கள் பின் தங்கிவிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். -BBC