கூர்காலாந்து தனி மாநிலமா?: பிரிக்க விடமாட்டேன் என்கிறார் மம்தா

india01813bஐதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படுவதை தொடர்ந்து மேற்கு வங்கத்தையும் இரண்டாக பிரித்து கூர்காலாந்து தனி மாநில கோரிக்கை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.இதுதொடர்பாக முதல்வர் மம்தாபானர்ஜி , கூர்காலாந்தை பிரிக்க விடமாட்டேன் என்றார்.

இந்தியாவின் 4-வது மிகப்பெரிய மாநிலம் என அழைக்கப்படும் ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க நேற்று நடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டத்திலும், காங். செயற்குழு கூட்டத்திலும் நடந்த நீண்ட விவாதத்தின் போது, ஒப்புதல் தரப்பட்டது.

இதன் ‌எதிரொலியாக , மேற்குவங்க மாநிலத்திலும் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை கூர்காலாந்து தனிமாநிலமாக அறிவிக்க கோரி கூர்காலாந்து ஜன்முக்தி மோர்ச்சா 72 மணி நேர பந்த்தினை நடத்தி வருகிறது.

இந்த பந்த்திற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளர். இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ,கூர்காலாந்து ஜன்முக்தி மோர்ச்சா கட்சியின் பொது‌ச்செயலர் ரோஷன் கிர், மத்திய அரசு, மற்றும் மேற்கு வங்க அரசு ஆகியோரிடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின்படி கூர்காலாந்து டெரிடோரியல் அட்மினிஸ்ட்ரேசன் (ஜி.டி.ஏ.) அமைக்கப்பட்டதற்கான ஒப்பந்தத்தினை பத்திரிகையாளர்களிடம் ‌காண்பித்தார்.

பின்னர் அவர் பேசியதாவது, மேற்கு வங்க மாநிலத்தின் ஒரு பகுதியாக கூர்காலாந்து இருக்கும். இதனை பிரித்து தனி மாநிலம் உருவாக்கப்படாது . மத்திய அரசு தலையிட்டு, போராட்டக்காரர்களிடம் ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து விளக்கம்வேண்டும். அவர்கள் தான் தேவையில்லாமல் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர் என்றார்.

TAGS: