உத்தரபிரதேசத்தில் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி பதவி நீக்கம்

dhurkaலக்னோ: உத்தரபிரதேசத்தில் நேர்மையான மற்றும் மணல் மாபியாக்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பாலை(28) அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்தது.

இதற்கு காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், ஐ.ஏ.ஏஸ். அதிகாரிகள் நடவடிக்கையை ரத்து செய்ய முதல் மந்திரி அகிலேஷ் யாதவிற்கு கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக உத்தரபிரதேச மாநில முதல் அகிலேஷ் யாதவ் மந்திரி கூறுகையில், அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்த மசூதியின் சுற்று சுவரை இடிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பால் உத்தரவிட்டார் எனவும் இதனால் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கிடையே துர்கா மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படாலம் என கூறப்பட்டது. ஆனால் உத்தரபிரதேச அரசு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யலாம் எனவும் அதனை அடுத்து அவர் இது தொடர்பாக பதில் அளிப்பதை வைத்து சஸ்பெண்ட் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், மாநிலத்தின் கவுதம் புத்தா நகரின் மாஜிஸ்திரேட் தகவலின்படி உத்தரபிரதேச அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கவுதம் புத்தா நகரின் மாஜிஸ்திரேட் தகவலின்படி, துர்கா சக்தி நாக்பால் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதியின் சுற்று சுவரை இடிக்க உத்தரவிடவில்லை என்றும் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்களால் அது இடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கட்டிடம் கட்டுவதற்கும், இடிப்பதற்கும் உரிமை பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாஜிஸ்திரேட்டின் தகவலை அம்மாநில அரசு கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அம்மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை விடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

TAGS: