தெலுங்கானா எதிரொலி: வலுப்பெறும் போடோலாந்து, கூர்காலாந்து தனி மாநில போராட்டம்

india03813aதிபு: தெலுங்கானா தனி மாநிலம் எதிரொலியாக வடகிழக்கு மாநிலமான அசாமில் கர்பி, ஆங்லாங் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இன்று நடந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதே போன்று மேற்குவங்கத்திலும் கூர்காலாந்து ‌தனி மாநில கோரி்க்கை தொடர்பாக போராட்டம் தீவிரமாகியுள்ளது.ஆந்திராவை இரண்டாக பிரித்து 29-வது மாநிலமாக தனித்தெலுங்கானாவினை காங். அரசு அறிவித்தது.

இதன் ‌எதிரொலியாக பல்வேறு மாநிலங்களிலும் தனி மாநில கோரிக்கை வலுத்து வருகிறது.
அசாமில் 2 பேர்பலி இதன் எதிரொலியாக வடகிழக்கு மாநிலமான அசாமில், கர்பி, ஆங்க்லாங் மாவட்டங்களை இணைத்து போடோலாந்து தனி மாநிலம் கோரி இன்று அப்பகுதியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு அனைத்து போடோ மாணவர் அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போடோ அமைப்பின் தலைவர் ஒருவர் கூறுகையில், தெலுங்கானா தனி மாநிலம் அறிவித்தது போன்று போடோலாந்து தனி மாநிலம் அறிவிக்கும் வரை போராட்டம் த‌ொடரும் என்றார்.

இன்று நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திபு பகுதியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர். இதனால் கர்பி, ஆங்க்லாங் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.

இதே போன்று மேற்குவங்க மாநிலத்தில் டார்ஜிலிங் பகுதியில் கூர்காலாந்து தனி மாநில கோரிக்கை வலியுறுத்தி, கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சியினர் 72 மணிநேர போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்று நடந்த போராட்டத்தில் அரசின் வனத்துறைக்கு சொந்தமான பங்களாவை சிலர் தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

TAGS: