புதுடில்லி: தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிரான போராட்டம், ஆந்திராவில் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. ஆந்திர மாநில காங்., – எம்.பி.,க்கள் 10 பேர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, காங்கிரசிலிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
இவர்களை பின்பற்றி, மத்திய அமைச்சர்கள் நான்கு பேர், காங்., தலைவர் சோனியாவிடம், இன்று, ராஜினாமா கடிதம் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தனி தெலுங்கானா மாநிலத்தை அமைக்கும் முடிவை, காங்கிரஸ் மேலிடம், சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து, நாட்டின், 29வது மாநிலமாக, தெலுங்கானா உதயமாகிறது.
காங்கிரஸ் மேலிடத்தின் இந்த முடிவால், ஆந்திராவின் ராயலசீமா, கடலோர ஆந்திர பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், அரசியல் கட்சியினரும், கோபம் அடைந்துள்ளனர்.
தெலுங்கானா தனி மாநிலம் அறிவிக்கப்பட்டதற்கு எதிராக, பல பகுதிகளில் போராட்டம் வெடித்து உள்ளது. குண்டூர், சித்தூர், விஜயவாடா, கடப்பா, அனந்தப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், கண்டன ஊர்வலங்கள், மனிதச் சங்கிலி போராட்டங்கள் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.
கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அரசு பஸ்கள், மிகக் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன; கடைகள் மூடப்பட்டுள்ளன. நேற்று, ஒரு சில இடங்களில், வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. மின் வாரியம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட, அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களும், போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
ஆந்திர மாநில, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், காங்கிரஸ் பிரமுகருமான, மகிதர் ரெட்டி, நேற்று, தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, முதல்வர் கிரண் குமார் ரெட்டியிடம் அளித்தார்.
ராயலசீமா, கடலோர ஆந்திர பகுதிகளைச் சேர்ந்த, காங்கிரஸ் லோக்சபா எம்.பி.,க்கள், சாய் பிரதாப், அனந்த வெங்கட்ராமி ரெட்டி, ஹர்ஷா குமார், அருண் குமார், லகதபதி ராஜகோபால், எஸ்.பி.ஒய்.ரெட்டி ஆகிய, ஆறு எம்.பி.,க்களும், நேற்று தங்கள் எம்.பி., பதவிகளை ராஜினாமா செய்தனர். டில்லியில், லோக்சபா பொதுச் செயலர் விஸ்வநாதனிடம், தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். ராஜ்யசபா எம்.பி.,யான, ராமச்சந்திர ராவ், தன் ராஜினாமா கடிதத்தை, ராஜ்யசபா பொதுச் செயலர், சம்சர் கே ஷெரீப்பிடம் அளித்தார்.
ஆந்திராவை, இரண்டாகப் பிரிக்கக் கூடாது என்பதே, எங்களின் கோரிக்கை. நாங்கள் பல முறை வற்புறுத்தியும், காங்., மேலிடம், அதை ஏற்காதது வருத்தம் அளிக்கிறது. இதனால் தான், ராஜினாமா செய்துள்ளோம். எங்களை பின்பற்றி, சபம் ஹரி, முகுந்தா ஸ்ரீனிவாசலு ரெட்டி, சாம்பசிவ ராவ் ஆகிய மூன்று எம்.பி.,க்களும், தங்கள் ராஜினாமாக்களை, “பேக்ஸ்’ மூலம் அனுப்பி உள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தனித் தெலுங்கானாவுக்கு எனது ஆதரவும் வாழ்த்துகளும்…!
மாநிலங்களை இரண்டாகப் பிரிப்பது, மத ரீதியாகப் பிரிப்பது, ஜாதி ரீதியாகப் பிரிப்பது இவைகளெல்லாம் பிற்போக்கான செயல். அரசியல்வாதிகளின் அடாவடிச் செயல்களால் நாடே பின் நோக்கிப் போகிறது.
இந்தியாவின் இன்னும் பல மாநில போராட்டங்கள் மேலும் வெடிக்கும், இதுதான் சரியான நேரம் தமிழர் நாடும் தனி நாடாக பிரிய வேண்டும். பல மாநிலங்களை கட்டி ஆளும் திறன் இன்றைய இந்தியனுக்கு யாருக்கும் அரசியல் பலம் போதாது. தமிழ் நாட்டை மூன்றாக பிரிக்க இப்போதே குரல் கிளம்பி விட்டது டில்லியில் 60 லச்சம் மக்கள் கொண்ட மாநிலம் ஒன்றுக்கு ஒரு முதல்வர்… 8 கோடி தமிழர்க்கு ஒரு தனி நாடு கட்டாயமாகிறது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த சித்தூர் மாவட்டத்தையும் நெல்லூர் மாவட்டத்தையும் (திருப்பதி மற்றும் காளஹஸ்த்தி பகுதிகளில் சுமார் 70விழுக்காடு தமிழர்கள் இருந்தும் அது ஆந்திரா வசமானது) தமிழரிடமிருந்து 1956ஆம் ஆண்டு தெலுங்கர்கள் அவர்களுக்கிருந்த அரசியல் ஆதிக்கத்தைக் கொண்டு பறித்துச் சென்றார்கள்… இப்ப, காலம் அவர்களுக்கு பதில் சொல்லுது!
உலகத்திலேயே அரசியல் பொருளாதார கல்வி அதிக குழப்பமிக்க நாடு இந்தியா. இன்று மக்கள் தொகையில் சீனாவை தாண்டிவிட்டதாகத் தகவல். சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு… நல்லா இருக்கே ! தமிழர் நாடும் ஒரு கம்யூனிஸ்ட் நாடா வந்தால் எல்லா அரசியல் அசிங்கங்களும் அடங்கிபோகும். பல தனி மாநில புரட்சிகள் தனி நாடு அடையாளமே! இனியாவது இந்தியா வளரட்டும்.
விருந்தாளியாக வந்தவளுக்கு அரியாசனம் கொடுத்த பலனை இந்தியா இன்னும் முழுமையாக அனுபவிக்க வேண்டிய நேரம் வரும்..