தமிழ்நாடு தனி நாடாக இருந்திருந்தால் எவ்வளவோ முன்னேறியிருக்கும் என தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் பொருளாதார வல்லுனர் ஜீன் டி ரெஸ் ஆகியோர் எழுதியுள்ள “நிலையில்லா புகழ் – இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்” என்ற நூல் பற்றி கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களைவிட வளர்ச்சி பெற்றுள்ளது.
இவற்றின் வளர்ச்சி தனி நாடுகளுக்கு இணையாக உள்ளது என அமர்த்தியா சென் குறிப்பிட்டு உள்ளார்.
அதேநேரத்தில் வளர்ந்த மாநிலங்கள் என்பதற்காக நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைக்கிறது.
இது வளர்ச்சி பெற்றதற்கு அளிக்கப்பட்ட தண்டனை போல் உள்ளது. இதை மத்திய அரசின் கவனத்துக்கு பலமுறை கொண்டு சென்றுள்ளேன்.
நாட்டில் நிலவும் வளர்ச்சி ஏற்றத் தாழ்வுக்கு பல கராணங்களை சுட்டிக் காட்டுகின்றனர். இதை சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்த பின் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளோம். அதே நேரத்தில் வறுமை, அடிப்படை வசதி குறைபாடுகளும் நீடிக்கின்றன.
முக்கிய பிரச்னைகள் குறித்து வசதி மிக்கவர்கள் மத்தியில் மட்டும் விவாதம் நடக்கிறது. இதை வசதியற்ற மக்கள் மத்தியிலும் உருவாக்க வேண்டும்.
அமெரிக்காவின் பாதையைப் பின்பற்றி வளர்ச்சி அடைந்து விடலாம் என எண்ணிவிடக் கூடாது. பொதுத் துறை, தனியார் துறை பொருளாதாரம் பற்றி தவறான அணுகு முறைகளே துவக்கத்திலிருந்து பின்பற்றப்படுகின்றன. மாற்றம் என்பது, உடனடியாக ஏற்படாது. கொஞ்சம், கொஞ்மாகத் தான் அது உருவாகும்.
கேரளாவும், தமிழ்நாடும் தனி நாடுகளாக இருந்திருந்தால் எவ்வளவோ முன்னேறியிருக்கும். மாநிலங்கள் அனைத்தையும் ஒரே அளவில் சீர்தூக்கி பார்க்காமல், அவற்றின் வளர்ச்சி, அதற்கான கூறுகளை அடிப்படையாகக் கொண்டு தனித்தனி அளவுகோல்களை நிர்ணயிக்க வேண்டும்.
இந்த அடிப்படையில் சேது கால்வாய் திட்டத்தை தடுக்காமல், அதன் ஒட்டுமொத்த பயனை எண்ணிப் பார்த்து அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தனி நாடு என இப்போது உளறுகிறாய் .
ஈழம் மக்கள் தொப்புள் கோடி உறவுகள் தனி நாடு போராட்டதில் குருடனாய் செவிடனாய் ஊமையாய் இருந்தாய் …!
“தமிழ்நாடு தனி நாடாக இருந்தால் எவ்வளவோ முன்னேறி இருக்கும்: கருணாநிதி” கேட்கவே இனிமையாக இருக்கிறது.பெரியவர் இதற்கு போராடுவாரா?எங்களின் ஆதரவு நிச்சயம் உண்டு.
தாத்தா இதைதான் கத்தி கத்தி கடந்த 10 ஆண்டுகளாக “செப்புறோம்” தெலுங்கல சொல்கிறோம் இப்பயாவது மர மண்டைக்கு ஏறுதே சந்தோசம்..இதுவும் அரசியல் சினிமா கினிமா வசனமில்லையே?
மீண்டும் தமிழ் நாடு என்று வேண்டாம். தமிழர் நாடு என்று குரல் கொடுப்போம். தமிழ் நாடு என்பதால் தமிழ் பேசும் அயல் மாநில இனத்தவர்கள் நம்மை ஏமாற்றியது போதும்.தமிழர் என்பது இனம்.காமராஜர் தமிழர் நாடு என்றார் தெலுங்கரான அண்ணாதுரை தமிழ் நாடு மொழி முக்கியத்துவம் என்று போட்டி போட்டு தமிழனான காமராஜரை அரசியளிலிருது ஓரங் கட்டினர்.இதனால் தமிழர் நாட்டில் தெலுங்கர்கள்/வடுகர்கள் அரசியல் ஆதிக்கம் இன்றுவரை ஓயவில்லை. நமது கொள்கை தாய் வழி தமிழர் தமிழ் வழி தமிழர் மட்டுமே தமிழர் நாட்டை ஆழ வேண்டும்.ஆக தமிழர் நாடு தனி நாடாக வேண்டும்.
இந்த தெலுங்கன் திடீர் என்று பல்டி அடிக்கிறான் ?