புதுடில்லி; இந்திய – பாக்., எல்லையில் நடந்த தாக்குதலில் பாக்., ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர் என இன்று அமைச்சர் ஏ. கே. அந்தோணி லோக்சபாவில் கூறியுள்ளார். நேற்றைய அறிக்கையில் இருந்து அப்படியே பல்டி அடித்தார்.
கடந்த 6-ம் தேதி இந்திய- பாக்., காஷ்மீர் எல்லையில் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பாக். ராணுவ உடையில் வந்த பாக்.,பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்து. இதனை பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணியும் பார்லி.,யில் தெரிவித்தார்.
இதற்கு பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாகிஸ்தானை தப்பிக்க வழிசெய்யும் விதமாக அந்தோணியின் பேச்சு உள்ளது , இது தவறானது என்றும் அந்தோணி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இது தொடர்பாக நேற்றும் இன்றும் பார்லி.,யில் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து அவைகள் மதியம் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அந்தோணி லோக்சபாவில் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: எல்லையில் நடந்த தாக்குதல் தொடர்பாக ராணுவத்தினர் அளித்த தகவலின் அடிப்டையில் தெரிவித்தேன். இந்நிலையில் இந்த தாக்குதலில் பாகிஸ்தான் படையினரின் சிறப்பு பிரிவினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் படையினரே இந்த சம்பத்திற்கு பொறுப்பு. மும்பை தாக்குதல் மற்றும் எல்லை தாக்குதல் நடந்து வரும்போதெல்லாம் இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளது.
இப்போதைய போக்கிற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா சமரசம் செய்து கொள்ளாது. சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா கட்டுப்பாட்டுடன் நடப்பதை பாகிஸ்தான் பலவீனமாக எடுத்து கொள்ளக்கூடாது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இவரது பேச்சுக்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். இது போன்ற குழப்பமான பேச்சு எதிர்காலத்தில் இல்லாது பார்த்துக்கொள்ள வேண்டும். தவறை திருத்தி கொண்டதற்கு மகிழ்ச்சி, என சுஷ்மா சுவராஜ் கூறினார்.
இதற்கிடையில் பாக்.,ராணுவ தாக்குதல் நடத்தியதால் இரு நாட்டு பேச்சுவார்த்தை நிறுத்தப்படும் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. இரு நாட்டு உறவு மற்றும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளை ஒப்படைத்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அதிகாரிகள் தரப்பிலான பேச்சு நடந்து முடிந்துள்ளது. அடுத்தக்கட்டமாக இரு நாட்டு பிரதமர் அளவிலான பேச்சு நடக்கவிருக்கிறது. இதுவரை இதற்கான தேதி எதுவும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் பாக்., தாக்குதல் எதிரொலியால் இந்த பேச்சு நடக்காது என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்தியாவின் தலைவர்களைப்போன்ற முதுகு எலும்பில்ல மடையர்களை மற்ற நாடுகளில் பார்க்க முடியாது.