‘சாவதற்காகவே ராணுவத்தில் சேர வேண்டும் ’- தியாகத்தை கொச்சை படுத்தும் பீகார் அமைச்சர்

BHIM  SINGHபாட்னா: இந்திய ராணுவத்தில் மற்றும் போலீஸ் படையில் சேர்பவர்கள் சாவதற்காகத்தான், மக்கள் ராணுவத்தில் சேர்ந்தால் சாகத்தான் வேண்டும், சாவதற்கு மட்டுமே என்று கொடூரமாக கொச்சைப்படுத்தும் படியான பீகார் அமைச்சரின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் பாக்., எல்லையில் கடந்த செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டனர். இந்த வீரர்கள் உடல் பீகார் மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. இங்கு அஞ்சலி செலுத்த வராதது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது கிராமப்புற துறை அமைச்சர் பீம்சிங், இந்திய ராணுவ வீரர்கள் நிலை குறித்து பேசுகையில்: ராணுவ வீரர்கள் இறுதிச்சடங்கில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? உங்கள் அம்மா யாராவது இது போன்ற இறுதிச்சடங்கில் பங்கேற்றுள்ளனரா? மக்கள் இந்திய ராணுவம் மற்றும் , பாதுகாப்பு படையில், சேருவது சாவதற்கு மட்டுமே, அவர்கள் ராணுவத்தில் சேர்ந்தால் சாகத்தான் வேண்டும். ராணுவ வீரர்கள் தியாகிகள் ஆக வேண்டும். இவர்கள் தியாகிகள் ஆவோம் என்று தான் ராணுவத்தில் , போலீசி்ல் சேருகின்றனர். இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

இவரது பேச்சு பொறுப்பில்லாதது என்றும் இப்படி கேவலமாக பேசக்கூடாது என்றும் பா.ஜ., மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். வீரர்களின் தியாகத்தை இவ்வாறு இழிவுப்படுத்தக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த பேச்சுக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் முதல்வர் நிதீஷ்குமார், அமைச்சரை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து அமைச்சர் பீம்சிங் மன்னிப்பு கோரினார். எனது பேச்சை மீடியாக்கள் திரித்து வெளியிட்டு விட்டன என்று குற்றம்சாட்டியுள்ளார். நான் தவறாக எதுவும் பேசவில்லை என்றார். ‌‌

TAGS: