கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.
அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர்.மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.
அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை.
அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார்.
அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள்.
ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க (காணொளி) வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார்.
அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான். கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான்.
ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி.
எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார்.
நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார். சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர்.
ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது.
வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது குநனநஒ, நு டியல, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. 100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நு டியல நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் நு டியல.
இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர்.
அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள்.
-VIA இராஜேந்திரகுமார்
தமிழன் வாழ்க
உங்களை போன்ற தமிழனுக்கு நிச்சயம் தலை வணங்க வேண்டும் தமிழன் தலை நிமிர வாய்த்த உங்களுக்கு இந்த சின்னவனின் பாராட்டுக்கள் ……………உங்கள் புகழ் மேலும் -2 உயர உலக தமிழன் எல்லோருடைய வாழ்த்துக்களும் உங்களை வந்து சேரும் .[இன்னும் பல தமிழனின் சாதனை மூலையில் முடங்கி கிடக்கிறது அதுவெல்லாம் உலக வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை ]
அம்மாடி…!!
வாழ்க தமிழன்
தமிழன்-pun boleh! சாதித்து சாதனை புரியுங்கள்.வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்
உலகத்துக்கே
தமிழன் தலையை நிமிர வாய்த்த தமிழ் தலை மகனே …
வாழ்க பல்லாண்டு
மிக்க நன்று, தமிழன் என்று சொல்லடா தலை இமிர்ந்து நில்லடா.
தமிழன் வாழ்க
வாழ்த்துக்கள்
தமிழ்
அன்பரே
.
தமிழால் முடியும் தமிழரால் முடியும்!
தேன் மதுர தமிழ் உலகெல்லாம் பரவுதல் செய்தல் வேண்டும் என்ற பாரதியார் கனவுக்கு வழிவகுத்து விட்டீர்.வாழ்த்துகள்.
சாதனை தமிழன்
அன்புள்ள முட்டாள் அறிவாளிகளே! இவர் தமிழன் என்றவுடன் வாரி கட்டிக்கொண்டு வருவதை பார்க்கும் போது சிறிப்புதான் வருகிறது. தான் கண்டு பிடித்ததை தமிழர்களும் தமிழ் நாடும் பயன் படுத்தும் வகையில் செய்யாமல் பணம் பண்ணும் வகையில் அமெரிக்காவில் ஆங்கில மொழியில் பவணி வரும் இவரைப் போன்றவரால் என்ன பயன்? இந்திய இவர்ருக்கு வாய்பளிக்காது, இவர்ருக்கு அங்கு வசதியில்லை போன்ற காரணங்களை நீங்கள் கூறலாம் – நான் இணையம் முழுவதும் தேடி விட்டேன் இவர் அப்படிப்பட்ட முயற்சி எதையும் செய்ய வில்லை என்பதுதான் வேதனை! அறிவு ஜீவிகள் தமிழர்களாக இருக்கும் போது தங்களது மொழியையும், பண்பாட்டையும், இனத்தையும் புறக்கணித்துவிட்டு செயல் படும் போது அதில் நமக்கு என்ன அவ்வளவு இன்பம்?
எனக்கு இவர் ஒரு தமிழன் என்பதை விட டமிழனாத்தான் காட்சி தருகிறான். இவரது கண்டு பிடிப்புக்கு ஒரு தமிழ் பெயர் இட்டு அதற்கு தமிழில் விளக்கம் கொடுத்து – தமிழ் மொழியை ஒரு விஞ்சான மொழியாக அறிமுகமாவது செய்திருக்கலாம். அல்லது தமிழ் சில தகவல்களை அனைதுள்ள நிலையில் பேசி அதற்கு உயர்வை கொடுத்திருக்கலாம். அப்படி செய்பவனால் மட்டுமே தமிழை வாழ வைக்கவும் வளர்கவும் இயலும்.
ஒரு யூதரோ, ஒரு ஜப்பானியரோ, ஒரு சீனரோ இவர் நிலையில் இருந்தால் அவரது தாய் மொழியைதான் முன் வைத்திருப்பார்.
எனது ஆதங்கம் அதுதான், மற்றபடி – தமிழனுக்கு அறிவு உள்ளது என்ற வகையில் மார்தட்டிக்கொள்ளலாம்.
வாழ்க tamilan
சாதனைஇக்கு வாழ்த்துக்கள். அதே நேரத்தில் தமிழனின் ஆதங்கத்திற்கும் அர்த்தம் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழன் திறமை உள்ளவன் என்பதற்கு இது ஒரு சான்று. தொடர்ந்து பல சாதனைகளைச் செய்து கொண்டு தான் வருகின்றோம். நமது உள்ளூர் தமிழ்ப்பள்ளிகளில் பல இளம் விஞ்ஞானிகளை உருவாக்குகிறோம்.ஆனால் அரசாங்க ஆதரவு இல்லாமல் இந்த சாதனைகள் தொடருகின்றன. தமிழன் என்று சொல்லிகொண்டே நம்மை முதுகில் எத்தனை பேர் குத்தினாலும் நமது சாதனைகள் தொடரும். வாழ்க தமிழனம்!
அறிவு மேதை தமிழன் அவர்களே நீர் சொல்வது உண்மையாக இருக்கலாம் அல்லது உன் கருத்தில் பொறாமைத்தனம் இருக்கலாம் .ஆனால் சொல்லும் விதம் தான் வேதனையாக இருக்கிறது.ஒரு தமிழனின் வெற்றியை அவன் சார்ந்த இனம்தான் முதலில் பாராட்டும் பெருமைபடும்.செம்பருத்தி செய்தியாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் ,தயவு செய்து இந்த செய்தியை உறுதிபடுத்தவேண்டும்.
வாழ்க tamilan
தமிழன் வாழ்க
naan intha seithiyai arinthu migavum manam magilgiren
திரு தமிழன் அவர்களே bloom energy inventor k.r. sridhar என்று google லில் தட்டிப் பாருங்கள். அவரைப் பற்றிய விவரங்களை தாங்கிய இணையப் பக்கங்கள் நிறைய வரும். இன்னொன்றையும் தெ(ளி)ந்து கொள்ளுங்கள். ஒரு தமிழனை வாழ்த்துவதற்கு உங்களிடம் வார்த்தைகள் இல்லையென்றாலும் பரவாயில்லை. வாழ்த்துவோரை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ள கருத்துக்களை பகிர்வு கொள்ளாமல் இருந்தாலே மிகுந்த நன்மை பயக்கும். நன்றி தோழரே!
முதலில் சாதனைகள் படைக்கும் எந்த ஒரு தமிழரையும், உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவராகக் கருதுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவர் செய்த சாதனையாக அதை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை பெறுங்கள். சாதனையாளர்களை ஒரு முன்னோடி உதாரணமாகக் கொண்டு நம் குடும்ப உறுப்பினர்களில் (தமிழ்ச் சகோதர சகோதரிகள்) மேலும் பலர் வெவேறு துறைகளில் சாதனைகள் படைக்க அது ஒரு உந்துதல் சக்தியாக உருவாகும்.
கல்வி, விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்பு, பொருளாதாரம் இன்னும் மற்றெந்த துறைகளிலும் உலகளாவிய நிலையில் நம் சகோதரர்கள் மென்மேலும் சாதனைகள் படைக்க அவர்களை தொடர்ந்து வாழ்த்துவோம் வாரீர்.
பெருமையாக இருக்கிறது…. நன்றி ஐயா.. உங்கள் முயற்ச்சி வெற்றி பெற வேண்டுகிறேன்..
அறிவு மேதை தமிழன் அவர்களே bloom energy inventor k.r. sridhar என்று google லில் தட்டிப் பாருங்கள். அவரைப் பற்றிய விவரங்களை தாங்கிய இணையப் பக்கங்கள் நிறைய வரும்.நான் படித்துவிட்டேன் நீர் பார்த்தீரா?
தமிழன் சொன்ன கருத்துக்கு ! மறு கருத்து சொன்ன ஜேம்ஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ! கே.ஆர் .ஸ்ரீதர் என்ற பெயரை முதலில் பாருங்கள் ,அதாவது அது தமிழ் பெயர் இல்லையே ? உண்மையில் அவர் தமிழர் என்றால் ,தமிழன் சார்பில் வாழ்த்துக்கள் சொல்ல கடமை பட்டிருக்கிறேன் !ஒரு வேலை அவர் நேர்முக பேட்டியில் I am ஸ்ரீதர் நாயுடு, அல்லது I am ஸ்ரீதர் மேனன், என்று சொன்னால் ,அவர் தமிழர் என்று சொன்னவர்கள் எல்லாம் என்ன செய்ய போகிறார்கள் ?
ஒரு காலக் கட்டத்தில் ஸ்ரீதர் என்னும் பிரபலமான தமிழ்ப்பட இயக்குனர் இருந்தாரே. அவர் தமிழர் தானே! தமிழர்களும் இது போன்ற பெயர்களை வைக்கிறார்களே. அப்படி இல்லையென்றால் என்ன? தமிழ் நாட்டுக்காரர் என்றால் அவரை தமிழர் என்றே எடுத்துக் கொள்வோம்!
தமிழ் நாட்டில் பிறந்த ஒரு சீனரை ,ஹிந்தி பெயரோ அல்லது ஆரிய பெயரோ வைத்திருந்தால் ,அவரை தமிழர் என்று அழைக்கலாமா ? போதிதர்மர் தமிழர் என்று சொன்னவர் நீங்கள்தானே ! i am not தமிழ் i am நாயுடு ,மேனன் என்று சொன்னாலும் நீங்கள் அவரை தமிழர் என்று ஏற்றுக்கொள்வீரா ? இனம் அறியாமல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டதால் தமிழன்,மொழி,இனம் அடையாளத்தை மறந்து போகிறான் !
தமிழ்நாட்டில் ராமர் என்பவர் மூலிகைப் பெட்ரோல் கண்டுபிடித்து தமிழில்தான் வெளியிட்டார். அன்றோடு காணாமல் போய் விட்டார். அங்கீகரிக்கப் படவில்லை. ஸ்ரீதர் தமிழரோ மலையாளியோ, தெலுங்கரோ.. திராவிட இனத்தைச் சேர்ந்தவர் என்பதை எண்ணி பெருமை கொள்வோம்.
நீங்கள் வேண்டும் என்றால் அவர்களை தமிழராக ஏற்றுக் கொள்ளுங்கள் ! ஒரு காலமும் அவர்கள் நாங்கள் தமிழர் என்று ஒப்புக்கொள்வதில்லை போதி அவர்களே !
ராமர் ஒரு வேதியல் நிபுணர்,அவர் கண்டு பிடித்த எரிபொருள் ,
பெட்ரோலுக்கு சமமானது. அந்த எரிபொருள் பயன்படுத்தினால் இஞ்சின் பழுதாகிவிடும் என்று இந்தியாவின் ஆரிய மேதாவிகள்,தமிழனை வளர விடாமல் செய்து விட்டார்கள். ஒரு கப்பில் உள்ள தண்ணிரை பெட்ரோல் ஆக்கும் சாய் பாபாவை நம்புவார்கள். பெரிய டாங்கிகளில் தண்ணிரை நிரப்பி பெட்ரோலாக ஆக்கினால் ,வளைகுடா நாடுகளில்இருந்து பெட்ரோல்லுக்கு கையேந்த தேவயில்லை.
நேத்ரா அவர்களே ! திராவிடன் என்று தொண்டை குழி தண்ணிர் வற்ற தமிழ் நாட்டு தமிழன்தான் காட்டுக்கத்து கத்துகிறான் ! மலையாளி நான் மலையாளி என்றும் ,தெலுங்கர் நான் தெலுங்கர் என்று சொல்கிறான் ,கன்னடகாரனும் அப்படியே ! மட்டி தமிழன்தான் தன்னை தமிழன் என்று சொல்லாமல் திராவிடன் என்று உளறுகிறான் ! இதை நாம் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் ,இலங்கை போரில் நமது உடன் பிறப்புகளை இழந்தோம் !
தாங்கள் கூறுவதிலும் உண்மை இருக்கின்றது.. தமிழின் கிளைமொழியை தாய்மொழியாகக் கொண்டவர் எவரும் தங்களை திராவிடர் என ஒத்துக்கொள்வதில்லை. நாம் மட்டும் தான் கூறிக் கொள்கிறோம்.
திராவிடன் என்று சொல்லுவதை நானும் விரும்பவில்லை. தமிழ் நாட்டில் அதுவும் சென்னையில் பல இனங்கள் வாழ்கின்றனர். அதிலும் குறிப்பாக மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் அதிகமாகவே வாழ்கின்றனர். இவர்களில் பலர் தமிழர்களோடு கலந்து விட்டனர். தங்களின் அடையாளத்தை இழக்காமலும் வாழ்கின்றனர். இவர்களையெல்லாம் பொதுவாக தமிழர்கள் என்று சொல்லி விடுகின்றோம். அப்புறம் என்ன சொல்லுவது? நான் அறிந்த சிலர்: நடிகர் விஜயகாந்த், நடிகர் தனுஷ், நடிகர் பாக்யராஜ், வைக்கோ, உடுமலை நாராயண கவி, கவிஞர் சுரதா இன்னும் பலர் மலையாள நடிகர் ஜெயராமன் தமிழன் என்று சொல்லுகிறார்கள். ஆனால் அவர் தன்னை மலையாளி என்று தானே சொல்லுகிறார். தமிழ் நாட்டில் மற்ற இனத்தவர்கள் அதிகம் இருப்பதால் தான் தமிழுக்குக் கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. நாம் இளிச்சவாயர்கள்! உண்மை தான்!
என்ன.. நடிகர் விஜயகாந்த், நடிகர் தனுஷ், நடிகர் பாக்யராஜ், வைக்கோ, உடுமலை நாராயண கவி, கவிஞர் சுரதா இவர்களில் யாரும் தமிழர் இல்லையா? ஐயோடா….
தமிழன் எப்போவோ நிமிர்ந்து நின்னுட்டான் …ஆனால் …தமிழ் மொழி மட்டும் படுத்து தூங்குதே ……
தமிழ் வாழ்க
மனதார பாராட்டுவோம்
மனதார பாராட்டுவோம் வாழ்த்துக்கள் ; ;
வாழ்க வாழ்க என் பாராட்டுகள்