தமிழகத்தில் கொத்தடிமைகளாக உள்ள ஆயிரக்கணக்காவர்களை மீட்க மாநிலம் தழுவிய செயல்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

child_labourஇந்தச் செயல்திட்டத்தை யுனிசெஃப் உட்பட பல அமைப்புகள் இணைந்து முன்னெடுத்துள்ளன.

மாநிலத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

1976 ஆம் ஆண்டு கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டபோது இருந்ததைவிட, தற்போது பல்வேறு புதிய வடிவங்களில் கொத்தடிமை முறை வளர்ந்துள்ளதாக யுனிசெஃப் அதிகாரியும் இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளவருமான வித்யாசாகர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

பல மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கட்டிடத் தொழில் மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் வேலைக்கு வருபவர்கள் கூட கொத்தடிமைகளாக வைக்கப்பட்டு வேலை வாங்கப்படுகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். -BBC

TAGS: