எல்லைப் பிரச்சினை : கலக்கத்தில் மோரே தமிழர்கள்

india_myanmar_borderஇந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கும் மியான்மாருக்கும் இடையேயான எல்லையில் முள்வேலிகளை அமைக்கும் பணியில் இந்தியத் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்தப் பணியில் பெருமளவு முடிந்த நிலையில், எல்லப்புறத்தில் இருக்கும் மோரே நகரில் வசிக்கும் தமிழர்கள் கலக்கமடைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

எல்லைகள் குறிக்கப்பட்டு அந்தப் பகுதியிலும் வேலிகள் அமைக்கப்படும் போது மோரே நகரின் சில பகுதிகள் மியான்மார் நாட்டுக்குள் சென்றுவிடும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

இது குறிப்பாக பெருமளவு தமிழர்கள் வாழும் பகுதி. அங்குள்ள அவர்களது ஆலயம், பாடசாலைகள் ஆகியவை மியான்மார் பகுதிக்கு செல்லக் கூடும் என்று தாங்கள் அஞ்சுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இப்பிரச்சினை மணிப்பூர் மாநில சட்டசபையிலும் எழுப்பப்பட்டுள்ளது. -BBC

TAGS: