இந்திய ரூபாயும், பங்குச் சந்தையும் தொடர்ந்து சரிவு

sensex indiaஇந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து எழுந்துள்ள கவலைகளால், நாட்டின் பங்குச் சந்தைகள் வெகுவாகச் சரிந்துள்ளன. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சிகண்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 700 புள்ளிகளுக்கும் மேல் குறைந்துள்ளது. வர்த்தக முடிவில் 18,600 புள்ளிகள் என்ற அளவை அது எட்டியுள்ளது. இதனால் இன்றைய தினத்தை கறுப்பு வெள்ளி என்று பங்கு வர்த்தகர்கள் வர்ணித்துள்ளனர்.

இந்த ஆண்டில் மட்டும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 15 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளது. ரூபாயின் சரிவைத் தடுக்க மத்திய அரசு சில நடவடிக்கைகளை அறிவித்தும், நாணய மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது.

அதே நேரம், இந்தியர் ஒருவர் வெளிநாட்டுக்கு கொண்டு செல்லக் கூடிய பணத்தின் அளவை மத்திய அரசு குறைத்துள்ளது. இது ஒரு பிற்போக்கான நடவடிக்கை என்று விமர்சகர்கள் சாடுகின்றனர். -BBC

TAGS: