கனடாவில் வின்னிபெக் நகரில் உள்ள சாலை ஒன்றுக்கு தேசப்பிதா மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
67வது இந்திய சுதந்திர தினத்தையொட்டி வியாழக்கிழமை நடந்த விழாவில் வின்னிபெக் நகர மேயர் சாம் காட்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மனித உரிமைகள் அருங்காட்சியகத்துக்குச் செல்லும் சாலைக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டுவது பொருத்தமானது. மனித உரிமைகளுக்காக போராடிய மகாத்மா காந்தி ஆன்மிகத் தலைவராகவும், அரசியல் தலைவராகவும் திகழ்ந்தவர் என்று பாராட்டிப் பேசினார் காட்ஸ்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தவர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கனடா நகர சாலைக்கு தமிழ் நாட்டில் சாதனை செய்த ஒரு தமிழர் பெயரை வைத்தால் சிறப்பாக இருக்கும் !உதாரணத்துக்கு – ராஜ ராஜ சோழன் ,பாரதியார் ,திருவள்ளுவர் ,மேலும் மறக்க பட்ட தமிழ் அறிஞர்கள் பெயர்களை வைத்தால் சிறப்பாக இருக்கும் ! ஒரு வடநாட்டுக்காரர் காந்தி பெயரை வைத்தால் அவ்வளவு சிறபாகா இருக்காது ,இருந்தாலும் பராவா இல்லை ,அனால் பெருமை தமிழர்களுக்கு கிடையாது !