மராட்டியத்தில் பில்லி சூனியம், மூட நம்பிக்கைக்கு எதிராக சட்டம்

black_magic_indiaஇந்தியாவின் மராட்டிய மாநிலம் பில்லி சூனியம் மற்றும் மூட நம்பிக்கைக்கு எதிரான சட்டத்தை அவசர அவசரமாக கொண்டுவந்துள்ளது.

அம்மாநிலத்தில் மூட நம்பிக்கைக்கு எதிராக போராடி வந்த செயற்பாட்டாளர் நரேந்திர டாபோல்கர் நேற்று-செவ்வாய்கிழமை கொலை செய்யப்பட்ட நிலையில், அரசின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

புனே நகரில் தனது காலை நடை பயிற்சியை மேற்கொண்டிருந்த போது 71 வயதான டாபோல்கர் அடையாளம் எதிர்யான ஒரு துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மிருகங்கள் பலி கொடுக்கப்படுவது, மதத்தின் பெயரால் மக்களை வழிபடுவது போன்ற பழக்கங்களுக்கு எதிராக பல தசாப்தங்களாக அவர் போராடி வந்தார்.

மாநில அமைச்சரவை இன்று ஒருமனதாக நிறைவேற்றியுள்ள சட்டத்தின்படி, சடங்குகள், மூட நம்பிக்கைகள் மற்றும் பில்லி சூனியம் ஆகியவை தடை செய்யப்படுகின்றன.

எனினும் இந்தச் சட்டம் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், இல்லையெறால் அது காலாவதியாகிவிடும்.

இதனிடையே அவரது கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானவர்கள் இன்று புனே நகரில் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். -BBC

TAGS: